Dual boot option not shown lenovo

நேற்று வரை dual boot திரை காட்டப்பட்டு சரியாக இயங்கியது. இன்று டுவல் பூட் திரை காட்டப்படவில்லை. நேரடியாக விண்டோசுக்குள் நுழைந்து விடுகிறது. கணினி, லினோவா கணினி. F12 அழுத்தி முயன்றேன். அப்போதும் dual boot option காட்டப்படவில்லை. உதவுங்களேன்.

3 Likes

பயாஸ் சென்று பூட் ஆர்டர் கானவும் அதில் லினக்ஸ் சம்பந்தப்பட்ட என்றி உள்ளதா என்று உறுதி படுத்தவும்

3 Likes

காட்டவில்லை. விண்டோஸ் மட்டுமே காட்டுகிறது

1 Like

லினக்ஸ் மிண்ட் பெண்டிரைவ் வைத்துள்ளீர்களா? அதை வைத்து பூட் செய்யவும். பிறகு ctrl-alt-t கொடுத்து வரும் திரையில் இந்த கமாண்டை இயக்கவும்.

sudo lsblk -o name,size,type,mountpoint,fstype,uuid

வரும் திரையை பகிரவும்.

2 Likes

பூட் மேனேஜரில் லினக்ஸ் மிண்ட் வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் எஃப் 12 அழுத்தித் தான் பூட் மேனேஜர் திரைக்குப் போக வேண்டியிருக்கிறது. நேற்று விண்டோசில் ஒரு வேலை செய்ய வேண்டியிருந்தது என்பதால் விண்டோசுக்குப் போனேன். அங்கே சில அப்டேட்ஸ் ஓடின. அதன் பிறகு இப்படி ஆகிறது.

2 Likes

ஆம். அந்த விண்டோசில் நடந்த அப்டேட்ஸ்தான் இதற்கு காரணம். அவை பூட் ஆர்டரில் முதலில் விண்டோஸ் வருமாறு மாற்றிவிடும். சில சமயம் லினக்ஸ் பூட்லோடரையே எடுத்துவிடும்.

தாங்கள் பயாஸ் சென்பு பூட் ஆர்டரில் முதலில் லினக்ஸ் வருமாறு வைத்தாலே போதுமானது.

3 Likes

பயாசில் அப்படி ஒரு தேர்வே இல்லையே. UEFI settings தேர்வில் மாற்ற வேண்டுமா?

2 Likes

UEFI settings ல் என்ன இருக்கின்றது. அதில் விண்டோஸ் பூட்லோடரும் லினக்ஸ் பூட்லோடரும் காண்பிக்கின்றதா என்று பார்க்கவும். அப்படி இருந்தால் அதன் ஆர்டரை முதலில் லினக்ஸ் வருமாறு வைக்கவும்.

3 Likes

வைத்து விட்டேன். சரியாக இயங்குகிறது. இந்த விண்டோஸ் தேவையில்லாத ஆணியைப் பிடுங்கியதால் இன்று சில மணிகள் வீணானது தான் மிச்சம்

4 Likes

ஆம், நீண்ட நாட்கள் கழித்து விண்டோஸ் பூட் செய்யும்போது ஏற்படும் சிக்கல் இது. நம்மை கேட்காமல் அதுவாகவே அப்டேட் செய்துகொள்ளும். சிஸ்டம் ரிசோர்களையும் டவுண்லோட் டிராபிக்கையும் பல மடங்கு எடுத்துக்கொள்ளும். நம் வேலையை செய்ய விடாது.

1 Like

Option of " Boot manager" on pressing F12 helps to update the sequence of OS to load. So, please try updating the configuration used with boot manager. Boot manager is also available from windows, where you can make the deafult which OS to choose. Second, verify that your partition has properly used for installing other dual boot OS. As well please check presently which mode your BIOS is configured to use like UEFI or GRUB loader based. With my experience, i used GRUB loader.

4 Likes