Install python matplotlib

மிகவும் சரியான முறை

mkdir ~/MyPythonProject
python3 -m venv ~/MyPythonProject/.venv
source ~/MyPythonProject/.venv/bin/activate
pip install matplotlib
deactivate

இங்கே MyPythonProject என்பதற்கு பதிலாக உங்கள் பைத்தான் புராஜக்டின் பெயரை (அல்லது அந்து புராஜக்ட் போல்டர் இருக்கும் இடத்தை) குறிப்பிடவும். இனி matplotlib உங்கள் பைத்தான் புராஜக்டில் சேர்கப்பட்டுவிடும். அதை உங்கள் பைத்தான் நிரலில் import செய்து கொள்ளலாம். இந்த முறையை பயன்படுத்தினால் உங்களுக்கு லேட்டஸ்ட் matplotlib வெர்ஷன் கிடைக்கும்.

சரியான முறை

sudo apt install python3-matplotlib

இந்த முறையில் நிறுவினால் matplotlib சிஸ்டம் டைரக்டரிகளில் நிறுவப்பட்டுவிடும். முதலில் ஒரு பைத்தான் புராஜக்ட் போல்டரை உருவாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் இந்த முறையை பயன்படுத்தினால் லேட்டஸ்ட் matplotlib வெர்ஷன் கிடைக்கும் என்ற உத்திரவாதம் இல்லை.

1 Like

venv appati na enna therunchika virumburan nanbare


ippo na python3.10-venv package install pannanuma?

ஆம்

sudo apt install python3-venv

இந்த கமாண்டை இயக்கவும் (python3-venv என்று கொடுக்க வேண்டும், python3.10-venv அல்ல)

இதை படிக்கவும்.

source ~/LearnPython/.venv/bin/activate

இந்த கமாண்டை பயன்படுத்தவும். மேலே தவராக குறிப்பிட்டுவிட்டேன். அதை சரிசெய்துள்ளேன். மேலும் activate செய்த என்விராண்மெண்டில் இருந்து வெளியேற

deactivate

இந்த கமாண்டை பயன்படுத்தவும். மேலும் emacs (with relevent python plugins), vscode (with python plugin), pycharm போன்ற IDE க்கள் உங்கள் LearnPython புராஜக்டை திறக்கும்போது .venv போல்டர் இருந்தால் அந்த என்விராண்மெண்டை தானாகவே ஆக்டிவேட் செய்துவிடும்.

vscode(with python plugin) eppiti pannu sago

vscode உன்மையான கட்டற்ற மென்பொருள் அல்ல (என்னுடைய கருத்து). அதை பற்றிய தகவல்களை என்னால் பகிர இயலாது. இணையத்தில் தேடிப்பார்த்து தெரிந்து கொள்ளவும்.

1 Like

sari sago
unmaidan


sudo apt install -y python3-tk

இந்த கமாண்டை இயக்கவும். பின் உங்கள் நிரலில்

import matplotlib
matplotlib.use('TkAgg')
import matplotlib.pyplot as plt
plt.plot([1, 2, 3])
plt.show()

இப்படி பயன்படுத்தி பார்க்கவும்.

1 Like

தீர்வு கிட்டியது :slight_smile:
நன்றி நண்பரே