Microphone not detected in my pc

நான் wired headset பயன்படுத்துகிறேன் என்னுடைய headset ஐ இதில் earphone port ல் சொருகினாள் audio and video வில் பாடலை கேட்க இயலுகிறது ஆனால் microphone port ல் headset ஐ சொருகினால் என்னால் எந்த ஒரு ஒலியையும் கேட்க இயலவில்லை மேலும் மற்றவர்களுக்கு நான் பேசுவதும் கேட்கவில்லை அவர்களால் எனது பக்கத்தில் இருந்து இரைச்சலை மட்டுமே கேட்க இயழுகிறது

உங்கள் ஹெட்செட்டில் ஒரு பின் இருக்கின்றதா அல்லது இரண்டு வயர் பிரிந்து இரண்டு பின் இருக்கின்றதா?

இதுதான் என்னுடைய headset ஒரு pin மட்டுமே உள்ளது

அப்படியென்றால் இதில் உள்ளபடி ஒரு கன்வர்டரையோ அல்லது

இது போன்ற ஒன்றையோ பயன்படுத்தி பார்க்கவும்.

1 Like


புதிதாக sound card வாங்கி முயற்சித்துள்ளேன் ஆனாலும் நான் பேசுவதை மற்றவர்களால் கேட்க இயலவில்லை எனது microphone முன்னர் இருந்தது போலவே இப்போதும் இருக்கிறது

தோழர், இரண்டு வயர்கள் உள்ள ஹேட்செட்டிற்கு தாங்கள் வாங்கயுள்ள கன்வர்டர் பயன்படும். ஒரு வயர் உள்ள ஹெட்செட்டிற்கு @tshrinivasan கூறியுள்ள கன்வர்டர் பயன்படுத்த வேண்டும்

அவர் கூறியதைத்தான் Solution என்று இங்கே தேர்வு செய்து உள்ளோம்.

அப்படியா நான்‌ தவறாக‌ புரிந்துகொண்டேன்

@tshrinivasan அவர்கள் கூறியது போன்று cable வாங்கினால் நான் தற்பொழுது வாங்கியுள்ள sound card தேவைப்படுமா அல்லது அவர்கள் கூறியது மட்டுமே போதுமானதாக இருக்குமா

தற்பொழுதுள்ள sound card பிற்காலத்தில் தாங்கள் இரண்டு வயர் உள்ள ஹெட்செட் வாங்கினால் அப்பொழுது தேவைப்பட வாய்ப்பு உள்ளது. @tshrinivasan கூறும் converter தான் தங்களுக்கு இப்போது தேவை.

நன்றி சகோதரரே நான் முயற்த்துவிட்டு வருகிறேன்


இப்பொழுது எனது microphone செயல்படுகிறது நன்றி சகோதரர் @tshrinivasan மற்றும் சகோதரர் @mohan43u

1 Like

என்னுனடைய மடி கணினியில் ஒரு port மட்டுமே உள்ளது, மற்றும் என்னுடைய mic ல் ஒரு 3.5mm jack மட்டுமே உள்ளது. நான் இதை முயற்சிக்கலாமா ? புகை படங்கள் கீழே கொடுத்துள்ளேன்


எதை முயற்சிக்கலாம் என்று கேட்கின்றீர்கள்? உங்கள் ஹெட்செட்டை அப்படியே மடிக்கணினியில் இணைத்து பயன்படுத்தவும். வேறு எந்த கன்வர்டரும் உங்களுக்கு தேவையில்லை.

earphone வேலை செய்கிறது ஆனால் mic வேலை செய்யவில்லை இரைச்சல் மட்டுமே கேட்கிறது.

லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து sound என்று தட்டச்சு செய்து வரும் மென்பொருளை இயக்கவும். மேலே input என்பதை கிளிக் செய்யவும். பின் Device Settings ல் உள்ள ரூலரை 50% வைக்கவும். பின் மைக் வேலை செய்கின்றதா என்று பார்க்கவும்.

இப்போதும் இரைச்சலே கேட்கிறது.

நான் இதே கண்ணினியில் விண்டோஸ் பயன்படுத்தும் பொது mic வேலை செய்தது.

https://forums.tamillinuxcommunity.org/t/topic/278/2

இங்கே உள்ள வழிமுறையை பின்பற்றவும். பின் கணினியை ரீபூட் செய்யவும். பின் மைக் சரியாக இயங்குகின்றதா என்று பார்க்கவும். அப்படி இயங்கவில்லை எனில் புதிதாக ஒரு தலைப்பில் (Press “New Topic” button on top right corner) உங்கள் சிக்கலை பதிவிடவும்.

இந்த command ஐ இயங்கிய உடன் ஒரு சிறிய அளவு இரைச்சல் மட்டும் கேட்டு கொண்டிடருகிறது ctrl+c கொடுத்தவுடன் நின்றுவிடுகிறது. மற்றபடி வேறெந்த சத்தமும் பதிவாகவில்லை. கீழே terminal வந்த output ஐ கொடுத்துளேன்.

bala@Lenovo-B490:~$ gst-launch-1.0 autoaudiosrc ! autoaudiosink
Setting pipeline to PAUSED …
Pipeline is live and does not need PREROLL …
Setting pipeline to PLAYING …
New clock: GstPulseSrcClock
Redistribute latency…
Redistribute latency…
^Chandling interrupt.
Interrupt: Stopping pipeline …
Execution ended after 0:04:22.513036459
Setting pipeline to NULL …
Freeing pipeline …

இந்த உரையாடல் ஏன் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது?

மன்னிக்கவும் தவறாக பதிவிட்டு விட்டேன். இந்த பதிவை நீக்கி விடவா ?