லினக்சு மிண்ட் 21 பதிப்பில் Brother DCP-L2520D மாதிரி படியெடுப்பியில் சில நேரங்களில் படி எடுக்கின்றது. சில நேரங்களில் படி எடுத்தால் அந்தப் படியெடுப்பியின் பெயரைக் கூட காட்டவில்லை. இதனைச் சரிசெய்ய வழிகள் உண்டா?
பிரிண்டர் கணினியுடன் நேரடியாக யூஎஸ்பி மூலம் இணைக்கப்பட்டுள்ளதா? அல்லது லோக்கல் நெட்வெர்க்கில் இணைக்கப்பட்டுள்ளதா?
நேரடியாக மடிக்கணினியுடன் யூஎஸ்பி மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
இங்கே சென்று Agree to the EULA an Download
என்பதை கிளிக் செய்யவும். ஒரு கோப்பு Downloads
டைரக்டரியில் பதிவிறக்கம் செய்யப்படும். மேலும் அந்த கோப்பை எப்படி பயன்படுத்தி டிரைவர்களை எப்படி நிறுவ வேண்டும் என்ற தகவலும் அந்த இணையதளத்தில் ஆங்கிலத்தில் வழங்கப்படும். அதன்படி செய்தால் டிரைவர் நிறுவப்படும்.
அது ஒரு தனியுரிமை மென்பொருள் என்பதால் நிறுவும்போது சிக்கல் ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு இங்கே பதில் கூற இயலாது. அதை தீர்க்க அந்த நிறுவனத்தின் உதவியை நாடவும்.
நன்றி!