கணினியில் தமிழ் உள்ளடக்கத்தோடு வேலைசெய்தல் (27 July 2024)

ஒருங்குறி அல்லது யூனிகோட் பல மொழிகளை கணினியில் கையாள்வதற்கான ஒர் அனைத்துலக சீர்தரம் ஆகும். தமிழைப் பயன்படுத்த, ஒருங்குறி இணையத்திலும் தொழிற்துறையிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனினும், தமிழை கணினியில் பயன்படுத்த பல பழைய பிரச்சினைகளையும், தொடர் சவால்களையும் நாம் எதிர்கொள்கிறோம்.

அரசு ஆவணங்களில் இருந்து உள்ளடக்கத்தை எளிதாக எழுத்துத் தரவாக பிரித்தெடுக்க முடியாதுள்ளது. ஒரு எழுத்துருவில் இருந்து ஒருங்குறிக்கு மாற்றுவது முற்றிலும் சரியாக அமைவதில்லை. தமிழை இலத்தீன்எழுத்துக்களில் ஒலிப்பெயர்ப்பு செய்வற்கு சிறிய வேறுபாடுகளுடான வெவ்வேறு சீர்தரங்கள் உள்ளன. தமிழில் தட்டச்சு செய்ய பல விசைப்பலகை மற்றும் உள்ளீடுகள் முறைகள் பழகத்தில் உள்ளன.

ஆய்வாளர்கள், நிரலாளர்கள், துறைசார்ந்தவர்கள் இந்த சவால்களுக்கான தீர்வுகளை கண்டடைவதை, மேம்படுத்துவதை தொடர்ந்து செய்கின்றனர். இந்த நிகழ்வில் கணினியில் தமிழ் உள்ளடக்கத்தோடு வேலைசெய்வது தொடர்பான தேவைகள், பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் தொடர்பான நிகழ்த்துகைகளும் (presentations) கலந்துரையாடல்களும் (discussions) இடம்பெறும். கணினியில் தமிழ் உள்ளடக்கத்தோடு வேலைசெய்பவர்களுக்கு இந்த நிகழ்வு பயன்மிக்கதாக அமையும்.

தயவு செய்து கணியிலும் நுண்பேசியிலும் தமிழைப் பயன்படுத்துவது தொடர்பான பின்வரும் பெயரிலா கருத்தாய்வை பூர்த்திசெய்க.

நிகழ்த்துகை தலைப்புகள்

  • ஒருங்குறி அறிமுகம் - இளங்கோ
  • கணினி மற்றும் நுண்பேசித் தளங்களில் தமிழ் விசைப்பலகைகளைப் பயன்படுத்தல் - சுகந்தன்
  • ஆன்ட்ராய்டின் புதிய, விரைவான மற்றும் இயல்பான தமிழ் தட்டச்சு முறை - இளங்கோ
  • பிடிஎப் ஆவணங்களில் தமிழை கையாளுதல் - சீனிவாசன்
  • தமிழ் எழுத்துரு வடிவங்கள் - உதயன்
  • எழுத்துரு மாற்றத்தில் இருக்கும் சவால்கள் - பரதன்
  • நூலக மீதரவு உருவாக்கத்துக்கான தமிழ் எழுத்துப்பெயர்ப்பு அணுகுமுறைகள் - நற்கீரன்

திகதி

யூலை 27, 2024 (சனிக்கிழமை) - மெய்நிகர் நிகழ்வு

9:30 am - 11:30 am (ரொறான்ரோ நேரம்)
7 pm - 9 pm (சென்னை/யாழ்ப்பாணம் நேரம்)

சூம்

பங்களிப்பாளர்கள்

  • UTSC Library Digital Tamil Studies
  • Kaniyam Foundation
  • Tamil Kanimai Maiyam (தகமை)
  • South Asian Canadian Digital Archive (SACDA)
1 Like