After update my linuxmint OS,my keypad is not working

Sir,I did dual boot .After update my linuxmint OS ,my keypad is not working.In windows ,it’s working normally.when the “not allowed” symbol in my screen ,my keypad is not working.Most of the time, when I click shift+spl characters it happens.
Is it hardware issue or anything else?

IMG20231127081708|666x500

அப்டேட் செய்வதற்கு முன் கீபோர்ட் நன்றாக வேலை செய்த்தா? அப்படியானால்

இங்கே கூறியுள்ள வழிமுறையை முயற்சித்து பார்க்கவும். முயற்சியின் விடையை பகிரவும்.

Now,My keypad is working.Thank you Sir.

இன்னும் வேலை முடியவில்லை, லினக்சில் லாகின் செய்து பின் லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி update manager என்று தட்டச்சு செய்யவும். வரும் Update Manager மென்பொருளை இயக்கவும். பின் அதில் view -> Linux Kernels தேர்வு செய்யவும். Continue கேட்டால் Continue கொடுக்கவும். பின் வரும் திரையை பகிரவும்.


6.2.0-39 என்ற வரியை கிளிக் செய்யவும். பின் Remove பட்டனை கிளிக் செய்யவும். பின் Yes கொடுக்கவும், பாஸ்வேர்ட் கேட்டால் தற்போது லாகின் செய்துள்ள பாஸ்வேர்டை கொடுக்கவும். முடிந்தபின் மீண்டும் View -> Linux Kernels செல்லவும்.

இப்போது 6.5 வரிசையை தேர்வு செய்யவும். அதில் எது லேட்டஸ்டாக உள்ளதோ அதை கிளிக் செய்து Install கொடுக்கவும். முடிந்தபின் கணினியை ரீபூட் செய்யவும்.

மீண்டும் சிக்கல் வருகின்றதா என்று பார்க்கவும். அப்படி வந்தால் மீண்டும் ரீபூட் செய்து Grub Menu வில் Advanced options தேர்வு செய்து மூன்றாவது வரியை தேர்வு செய்யவும் (6.2.0-37 கர்னலை தேர்வு செய்ய வேண்டும்).

6.5 வரிசை கர்னலில் சிக்கல் வருகின்றதா இல்லையா என்று கூறவும்.

1 Like

Sir,I did the above instructions.6.5 KERNEL is working.

மகிழ்ச்சி.

Thank you Sir.