Brightness option is not working in linuxmint. Can anyone help me to fix it

இந்த சிக்கல் லினக்ஸ் மிண்டிலும் தொடர்கின்றதா? அப்படியானால்

sudo lspci -v -s 0000:01:00.0

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

நான் ubuntuவில் …மேல் காணும் புகைப்படத்தில் இருக்கும் படி… காணமுடிகிறது

சிக்கல் இருக்கும் கணினியில் லினக்சை பூட் செய்து, பின் அதில் லாகின் செய்து, ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

cat /etc/os-release
sudo lspci -v -s 0000:01:00.0

இந்த இரண்டு கமாண்டுகளையும் இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

ls /sys/class/backlight

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

கணினியை ரீபூட் செய்யவும் பின் உபுண்டுவில் லாகின் செய்து ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

echo -e "Section \"Device\"\n\tIdentifier \"Device0\"\n\tMatchDriver \"nvidia\"\n\tDriver \"nvidia\"\n\tOption \"RegistryDwords\" \"EnableBrightnessControl=1\"\nEndSection" | sudo tee /usr/share/X11/xorg.conf.d/10-nvidia.conf

இந்த கமாண்டை இயக்கவும் பின்

ls -ltr /usr/share/X11/xorg.conf.d/
for dm in lightdm gdm; do pids=$(pgrep "${dm}" 2>/dev/null); [[ -n "${pids}" ]] && ps hup ${pids}; done

இந்த கமாண்டுகளை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

restart செய்து … ubuntu இல் வந்தால்… மேல் காணும் புகைப்படத்தில் இருக்கும் படி வருகிறது

நான் telegram யில் ஒரு video sent pannirukke… my start like that

உபுண்டுவை பூட் செய்து மீண்டும் ctrl-alt-f2 கொடுத்து வரும் டெர்மினலில் லாகின் செய்யவும், பின்

journalctl -b | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கவும், ஒரு இணைய இணைப்பு வரும் அதை பகிரவும்.

கணினி இணையத்தில் இணைந்து இருக்க வேண்டும்.

alt+ctrl+f2 …tty open aakala

ரீபூட் செய்யவும். பின் உபுண்டுவை தேர்வு செய்யும் வரியில் e தட்டச்சு பொத்தானை அழுத்தவும். பின் quiet splash என்று முடியும் வரியில் quiet splash systemd.unit=multi-user.target என்று முடியுமாறு வைக்கவும். பின் ctrl-x தட்டச்சு கோர்வையை அழுத்தவும். இப்போது டெர்மினல் வரும் அதில்

இங்கே குறிப்பிட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும்.

sudo apt install curl

இந்த கமாண்டை இயக்கி curl நிறுவவும், பின்

இங்கே உள்ளபடி முயற்சிக்கவும்.

This problem is solved by mohan43u on 28.5.2023 in KanchiLUG meeting.

1 Like

என்ன வழிமுறைகளைப் பின்பற்றினீர்கள் என்பதையும் இங்கே பதிந்தால், பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

அவருடைய உபுண்டுவில் புதிய nvidia GPU டிரைவர் நிறுவியபின் உபுண்டுவின் உள்ளே நுழைய முடியவில்லை, அதே கணினியில் தோழர் லினக்ஸ் மிண்ட் நிறுவி இருந்ததால் உபுண்டு வேண்டாம் என்று முடிவு செய்தார், அதன்படி உபுண்டுவை எடுத்துவிட்டோம்.

லினக்ஸ் மிண்டிலும் Brightness வேலை செய்யவில்லை, ஏனெனில் அவர் கணினியில் உள்ள GPU விற்கு வேண்டிய nvidia டிரைவரை அவர் லினக்ஸ் மிண்டில் இல்லை. அப்படி நிறுவினாலும் உபுட்டுவில் ஏற்பட்ட அதே சிக்கல் லினக்ஸ் மிண்டிலும் வரும். எனவே அவர் nvidia டிரைவர் நிறுவுவதை விரும்பவில்லை.

1 Like