Cgroup and namespace

What is cgroup And namespace

நீங்கள் அதில் உள்ள பாதிப்பு மற்றும் அதில் உள்ள அச்சங்கள் பற்றி விரிவாக விளக்கவும்

அதில் பாதிப்பு, அச்சம் ஏதுமில்லை.

ஒரு வரி வினாக்களைத் தவிர்க்க வேண்டுகிறேன்.

உங்கள் ஒரு வரி வினாக்களை கூகுளில் கேளுங்கள். பதில் கிடைக்கும்.

அவற்றில் ஏதேனும் புரியவில்லை என்றால் இங்கு விரிவாக கேளுங்கள்.

We are not your paid PA , to do google search for you.

Ok sir you are not my paid PA already I know that sir

நீங்கள் இப்படி கூறுவது தவறு

நான் இதை பற்றி கூகுள் மற்றும் AI யில் கேட்டேன் அது மட்டுமில்லாமல் youtube யில் பார்த்தேன் ஆனால் யாரும் இதை பற்றி தமிழில் கூறவில்லை
இந்த C group மற்றும் Namespace எவ்விதம் Chroot மற்றும் Docker தொழில்நுட்பத்தில் எவ்வாறு Container -ல் isolation செய்கிறது. அதை எவ்வாறு சிறந்த முறையில் Multiple container எவ்வாறு isolation செய்வது மற்றும் ஒரு முறை செய்த Config புதிதாக சேர்க்கப்படும் Container - ல் வேலை செய்யுமா
ஒரே நேரத்தில் இரண்டிற்கும் மேற்ப்பட்ட container எவ்வாறு உதவும்
அது host System - ல் எவ்வாறு மேலும் பாதுகாப்பை ஏற்படுத்தும்
அதை எவ்விதம் configuration செய்வது என்பதை பதிவிடுங்கள்

1 Like

இந்த C group மற்றும் Namespace எவ்விதம் Chroot மற்றும் Docker தொழில்நுட்பத்தில் எவ்வாறு Container -ல் isolation செய்கிறது

இதற்கு விடை தெரிய முதலில்

  1. chroot கமாண்டை படிக்கவும். அதை பயன்படுத்தி பார்க்கவும். debootstrap மற்றும் chroot பயன்படுத்தி எப்படி ஒரு chroot என்விராண்மண்டை உருவாக்குவது என்று தெரிந்துகொள்ளவும்.
  2. namespace பற்றிய தகவலை படிக்கவும். debootstrap மற்றும் unshare பயன்படுத்தி எப்படி ஒரு கண்டெய்னரை உருவாக்குவது என்று தெரிந்து கொள்ளவும்.
  3. இந்த இரண்டு வகையான எண்விராண்மண்டுகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை தெரிந்து கொள்ளவும். அப்படி தெரிந்து கொண்டீர்கள் என்றால் உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.

இவற்றை தெரிந்துகொள்ளும்போது ஏதேனும் சந்தேகம் வந்தால் இத்தளத்தில் கேட்கவும். கேட்கும்போது தாங்கள் ஏன்னென்ன செய்தீர்கள், எங்கே சிக்கல் வருகின்றது, என்று தெளிவாக கேட்கவும். அப்போதுதான் பதில் அளிப்பவர்களால் உங்களுக்கு உதவ முடியும்.

2 Likes

புரிந்து கொண்டமைக்கு நன்றி.

இது போல விரிவாக எழுதினால் மட்டுமே உங்களுக்கு என்ன தேவை என்று புரிந்து கொள்ள இயலும்.

உங்கள் கேள்விகளுக்கு @mohan43u அளித்த பதில் காண்க. அதில் உள்ள இணைப்புகளைப் படிக்கவும்.

நன்றி

நான் எப்படி ஒரு வினாவை இந்த தளத்தில் எப்படி எழுப்ப வேண்டும் என்று தெரிந்துக்கொண்டேன் மற்றும் எனது சந்தேகத்தை தெளிய வைக்க உதவிய தமிழ் Linux சமூகத்திற்கும் @mohan43u நண்பருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
மேலும் எனக்கு வரும் சந்தேகங்களை தெளிவாக பதிவிட்டு தெளிப்படுத்திகொள்ளேன்😊