clamAv and immunte

ஐயா, linux-க்கு, ClamAv மற்றும் Immunet போன்ற பாதுகாப்பு செயலிகள் அவசியமா? நான் எனது மடிக்-கணினியில் Internet இணைத்து வேலை செய்கிறேன். மடிக்கணினி பாதுகாப்பிற்கு இவைகள் அவசியமா?
அல்லது இணைய பயன்பாடு பாதுகாப்பிற்கு வேறு ஏதேனும் நிறுவ வேண்டுமா? தெரிந்தால் சொல்லவும்…

1 Like

நம் கணினியில் எத்தனை anti-virus வைத்திருந்தாலும் தேவையில்லாத இடத்தில் இருந்து தேவையில்லாத மென்பொருளை பதிவிரக்கம் செய்து அதை இயக்கினால் சிக்கல் வரத்தான் செய்யும். clamav மற்றும் immunet அவசியமா அல்லது அவசியம் இல்லையா என்பதை அதன் பயனர்தான் முடிவு செய்ய முடியும். அதை பயன்படுத்தாதவர்களிடம் கேட்டால் அவர்கள் அதற்கு பதில் சொல்வது இயலாது.