உங்கள் ஆணைகளை செயல்படுத்தக் காத்திருக்கும் டெர்மினலுக்கு, அட்டகாசமான பல அலங்காரங்கள் செய்ய விருப்பமா?
சாதாரணமான கருப்புத்திரை உங்களுக்கு சலிப்பு தருகிறதா?
வாருங்கள். உங்கள் கருப்புத் திரையை ஆங்கிலத் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் உருமாற்றலாம்.
GitHub - GitSquared/edex-ui: A cross-platform, customizable science fiction terminal emulator with advanced monitoring & touchscreen support. இங்கு சென்று பாருங்கள்.
Releases · GitSquared/edex-ui · GitHub இங்கு சென்று Assets பகுதியில் உள்ள
eDEX-UI-Linux-x86_64.AppImage என்ற கோப்பை இறக்கிக் கொள்ளுங்கள்.
அது Downloads என்ற folder ல் பதிவிறக்கி இருக்கும்.
எனவே நீங்கள் டெர்மினலில் அந்த folder க்கு செல்ல வேண்டும்.
ஒரு டெர்மினல் சென்று
cd Downloads
பின்
chmod a+x eDEX-UI-Linux-x86_64.AppImage
என்ற கட்டளை தருக. இது உங்கள் கோப்பை execute செய்வதற்கு ஏற்றதாக மாற்றி விடும்.
பின் ./eDEX-UI-Linux-x86_64.AppImage என்ற கட்டளை தருக.
திடுமென உங்கள் திரை, ஒரு மாயத்திரையாக மாறிவிடுவதைக் காண்பீர்கள்.
அதே டெர்மினல்தான். அதே கட்டளைகள் தான். ஆனால், சில லாகிரி வஸ்துகளைச் சேர்த்து, ஒரு மாயத்திரையாக உருவெடுக்கிறது.
இதை வைத்து சில காலம் நண்பர்கள், உறவினர்களிடம் படம் காட்டி மகிழ்க.
3 Likes
இதனை லினக்சு மிண்டு 21-இல் நிறுவ முயற்சித்தேன். ஆனால், பின்வரும் படத்தில்
உள்ளதுபோல் பிழை வருகின்றது. நிறுவுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
eDEX-UI-Linux-x86_64.AppImage என்ற கோப்பை இறக்கிக் கொள்ளுங்கள்.
அது Downloads என்ற folder ல் பதிவிறக்கி இருக்கும்.
எனவே நீங்கள் டெர்மினலில் அந்த folder க்கு செல்ல வேண்டும்.
ஒரு டெர்மினல் சென்று
cd Downloads
பின்
chmod a+x eDEX-UI-Linux-x86_64.AppImage
என்ற கட்டளை தருக. இது உங்கள் கோப்பை execute செய்வதற்கு ஏற்றதாக மாற்றி விடும்.
பின் ./eDEX-UI-Linux-x86_64.AppImage என்ற கட்டளை தருக.
நன்றி! தாங்கள் காட்டிய வழிமுறைப்படி செய்தாலும்
neyakkoo@sathiyaraj:~$ cd Downloads
neyakkoo@sathiyaraj:~/Downloads$ chmod a+x eDEX-UI-Linux-x86_64.AppImagee
chmod: cannot access ‘eDEX-UI-Linux-x86_64.AppImagee’: No such file or directory
neyakkoo@sathiyaraj:~/Downloads$
என்றே வருகின்றது.
Yes, it will show error because the file name does not match the file you have in downloads
You can run below commands one by one
cd Downloads
Then
chmod a+x eDEX*
After that
./eDEX*
அவ்வாறு தந்தும்,
neyakkoo@sathiyaraj:~/Downloads$ chmod a+x eDEX*
neyakkoo@sathiyaraj:~/Downloads$ ./eDEX*
bash: ./eDEX-UI-Linux-arm64.AppImage: cannot execute binary file: Exec forma
இவ்வாறான பதிலே வருகின்றது.
eDEX-UI-Linux-x86_64.AppImage
என்ற கோப்பை பதிவிறக்கம் செய்க.
இது 64 பிட் இன்டெல் கணினிக்கானது.
நீங்கள் பதிவிறக்கியது arm வகை கணினிக்கானது.
எனவே தான் இயங்க வில்லை.
தற்போது உள்ள கோப்பை அழித்து விட்டு,
x86_64 வகை கோப்பை பயன்படுத்துக.
நன்றி… நிறுவிக் கொண்டேன். இந்த அமைப்பிலிருந்து பயனாளர் தளத்திற்கு வருவது எப்படி?
exit தந்து வெளியேறிவிட்டேன். இருப்பினும் சில திரைப்பிடித்தல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.