Environmental variables na enna? Athoda types pathi sollunga

Environmental variables na enna? Athoda types pathi sollunga

1 Like

நீங்கள் எந்த Environment Variablesஐக் குறிப்பிடுகிறீர்கள்? பொதுவாக, environment variable என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், சின்ன கதை சொல்கிறேன். புரிகிறதா எனப் பாருங்கள்.

ஒரு கூட்டத்தில் ஐந்து பேர் இருக்கிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒருவருக்கு மட்டும் சீன மொழி தெரிந்திருக்கிறது. அந்த ஒருவர் மற்ற நான்கு பேரிடமும் ‘எனக்குச் சீன மொழி தெரியும்’ எனச் சொல்லி வைத்தால் தானே, சீன மொழியில் ஒரு கடிதம் வந்தால் அதை அவரிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வார்கள். அது போலச் சொல்லி வைப்பது தான் Environment Variables.

நம்முடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு ஜாவா, பைத்தான் போன்ற மொழிகள் தெரியாது. எனவே, ஜாவாவின் கம்பைலரோ, பைத்தானின் இன்டர்பிரட்டரோ அதன் சூழலில் (Environmentஇல்) எங்கே இருக்கிறது எனச் சொல்லி வைத்து விட வேண்டும். அப்படிச் சொல்லி வைத்து விட்டால், நாளை யாராவது ஒருவர் பைத்தானிலோ ஜாவாவிலோ எதையாவது கொண்டு வந்தால், ஆப்பரேட்டிங் சிஸ்டம் 'தன்னுடைய சூழலில் (Environmentஇல்) அதற்குரிய ஆளைக் கண்டுபிடித்து, ‘இந்தாப்பா ஜாவால ஒரு கடுதாசி வந்திருக்கு, பைத்தான்ல ஒரு கவிதை வந்திருக்கு’ படிச்சு சொல்லு, என்று சரத்குமார் வடிவேலுவிடம் சொல்வது போலச் சொல்லும். இப்படிச் சொல்வதற்குத் தான் Environment Variables பயன்படுகின்றன.

இது பொது நிலை. இன்னும் நீங்கள் கேள்வியைக் குறிப்பிட்டுச் சொன்னால், நன்றாக இருக்கும். இல்லை, இதுவே புரிந்து விட்டது என்றாலும் சரி.

5 Likes

Port environment variable pathi sollunga? Athu en port variable use panni java or python environment ah operating system ku solrom… Vera variables use panni sollalama?Apdi solla lam na Vera enna Enna variable la use pannalam? Sollakudathu na Vera enna enna variable la irukku… Atha la entha idathula use pannalam?

Thank you sir

முதலில் போர்ட்(port) என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். பேருந்து நிலையத்திற்குப் போய்ப் பார்த்தால், சென்னை செல்லும் பேருந்துகள் ஓரிடத்தில், மதுரை செல்லும் பேருந்துகள் ஓரிடத்தில் என நிறுத்தி வைத்திருப்பார்கள் அல்லவா? அந்தப் பேருந்து நிலையம் தான் நம்முடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம். ஆப்பரேட்டிங் சிஸ்டத்திடம் எந்தெந்த போர்ட்டில்(port) எந்தெந்த வேலைகள் செய்ய வேண்டும் எனச் சொல்லி விடுவார்கள். இப்படித் தான் USBக்கு ஒரு போர்ட், சார்ஜிங்கிற்கு ஒரு போர்ட், மெமரி கார்டுக்கு ஒரு போர்ட் எனக் கணினியில் நாம் பார்க்கிறோம். இவை ஹார்டுவேர் போர்ட்டுகள். ஹார்டுவேர் போர்ட்கள் போல சாப்ட்வேர்களுக்கும் உண்டு - அவற்றைத் தனித்தனியே அடையாளப்படுத்தத் தான் போர்ட் என்விரோன்மென்ட் வேரியபிள்கள் பயன்படுகின்றன.

போர்ட் என்விரோன்மென்ட் வேரியபிள்கள் தவிர, சாதாரண என்விரோன்மென்ட் வேரியபிள்கள் இருக்கின்றன. logname, pwd, editor ஆகியன சில என்விரோன்மென்ட் வேரியபிள்கள். இவற்றை முனையத்தில்(terminal) கொடுத்து முயன்று பாருங்கள்.

2 Likes

ஹாய் @kailash_s

பிளீஸ் ரைட் இன் தமிழ் ஆர் இங்கிலீஷ்.

ஐ டோன்ட் அன்டர்ஸ்டான்ட் வாட் லேங்குவேஜ் யு ஆர் ரைட்டிங்.

இட் ஈஸ் ரியலி டஃப் பார் மி டு ரீட் வாட் யு ஏவ் ரிட்டன்.

ஓப் யு ஆர் ரியலைசிங் த பெயின் ஆப் ரீடிங் சம்திங் விச் ஈச் நாட் தமிழ் ஆர் இங்கிலீஷ் பை ரீடிங் திச் டெக்ச்ட்.

2 Likes

ஒரு நிரல்(செயலியோ, சேவையோ, இன்னபிற நிரல்களோ) பல்வேறு வழிகளில் தரவுகளை பெறும். நிரலுரைகளில் வரையறுக்க பட்ட மாறி(variables) வழியாக, அல்லது கோப்பு(file) வழியாக (இதில், stdin, stdout, stderr உம் அடங்கும்), புகல்வாய்(port) வழியாக முதலிய பல முறைகளில் தரவுகள் செலுத்தப்படலாம்.

நிரலுக்குள்ளே இருக்கும் *அளாவிய மாறி(global), அடங்கிய(local) மாறி போல, நிரலுக்கு புறத்தே/வெளியே இருப்பது சுற்றுப்புற மாறி(environment). சுற்றுப்புற மாறிகளின் பயன்பாடுகள் எண்ணற்றவை. அவற்றில் ஒன்று PATH சுற்றுப்புற மாறி. python, java, gcc, ls முதலிய பல்வேறு கட்டளைகளை இடும்போது அக்கட்டளைகளை முடுக்கிவிடுவதற்கு முன்பு, அக்கட்டளைகளின் நிரல்கள் எங்கு நிறுவப்பட்டிருக்கின்றன என்பதைக்கண்டறிய வேண்டும். இப்படி எங்கெல்லாம் அக்கட்டளைகளை தேடவேண்டும் என்ற கோப்படைவுகளின்(directories) பட்டியலே PATH மாறி.

எ.டு:

 /home/vanangamudi/.local/usr/local/bin/:/home/vanangamudi/.local/bin/:/home/vanangamudi/.local/bin:/home/vanangamudi/bin:/usr/local/sbin:/usr/local/bin:/usr/sbin:/usr/bin:/sbin:/bin:/usr/games:/usr/local/games:/snap/bin

சுற்றுப்புற மாறிகள் எப்பொழுதுமே சரங்கள்(string) தாம். எண்களாகவோ (integers or float), ஏன் பட்டியல்களாகவோ(lists) கூட இருக்க முடியாது. பிறகெப்படி PATHஐ பட்டியெலென்றேன் என்று கேட்கிரீர்களா :slight_smile:

மேலே உள்ள எடுட்துகாட்டை உற்று நோக்கினால் அது ’ : ’ பிரிக்கப்பட்ட சரம் என்பதை உணரலாம். bash உட்பட அனைத்து நிரல்களும் PATH மாறி இந்த **’ : '**இனால் பிரிக்கப்படும் வழக்கத்தை உணர்ந்தமையால் சரம்(string) எப்படி பட்டியலானது(list) என்று ஒரு குழப்பமும் வரவில்லை.

env என்ற கட்டளையைக்கொடுத்து பாருங்கள், என்னென்ன சுற்றுப்புற மாறிகள் இருக்கின்றன என்று காட்டும்.

புதிய சுற்றுப்புற மாறிகளை சேர்ப்பது எளிது. export, setenv முதலிய கட்டளைகள் இதற்குதவும்.

எ.டு:

$ export DAMAAL=DUMEEL
$ export DAMAAL="DUMEEL damaal"

சேர்த்த மாறிகளின் மதிப்பை காண, echo கட்டளையை பயன்கொள்க. மாறியின் பெயருக்கு முன்பு $ இருப்பதை நோக்குக.

$ echo $DAMAAL
DUMEEL damaal
3 Likes

Where can I go to study about networking in Tamil? Thank you

தோழர், தங்கள் கேள்வியை புதிதாக ஒரு தலைப்பை உருவாக்கி (மேலே உள்ள New Topic அழுத்தி) கேட்கவும். இங்கே உள்ள தலைப்பிற்கு தொடர்பில்லாத விவாதத்தை தவிர்கவும்.