Git push செய்ய வேண்டும்


git commit செய்துவிட்டு,git push கொடுத்தாள் .

இது போல தெரிகிரது

இது போலப் பிழைச் செய்திகள் வரும்போது அந்தச் செய்திகளை வாசித்தாலே போதும். நாமே தீர்வு கண்டு விடலாம். நீங்கள் பகிர்ந்திருப்பதில் இருக்கும் செய்தியைப் பாருங்கள்.

கிட் கடவுச்சொல்(பாஸ்வேர்டு)லை இங்கே கொடுப்பது ஆகஸ்ட் 13, 2021இலேயே முடிவுக்கு வந்து விட்டது. இனிமேல் git push கொடுக்கும் போது Personal Access Token கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது.

Personal Access Token எப்படி உருவாக்க வேண்டும் என்பதை
https://docs.github.com/en/authentication/keeping-your-account-and-data-secure/creating-a-personal-access-token#creating-a-token

இணைப்பில் பார்த்துச் செய்யுங்கள். அந்த டோக்கனை git pushஇன் போது கொடுங்கள்.

குறிப்பு: github.com கட்டற்ற மென்பொருள் இல்லை. gitlab.com தான் அதன் கட்டற்ற வடிவம்.

2 Likes