லினக்ஸ் இயங்குதளத்தை Hack செய்ய இயலுமா?

ஐயா. லினக்ஸ் இயங்குதளத்தை Hack செய்ய இயலுமா? தற்காத்துக்கொள்ள வேண்டிய நடைமுறைகள் என்னென்ன? அதன் பாதுகாப்புத் தன்மையை பற்றி விளக்கவும்.

2 Likes

எந்த ஒரு இயங்கு தளத்தையும் Hack/Crack செய்ய முடியும். அப்படி முடியாத ஒரு இயங்குதளம் இதுவரை கண்டுபிடிக்கபடவில்லை.

சைபர் செக்யூரிட்டியில் உள்ள மிகப்பெரிய பலவீனம் மனிதர்களே ஆவர். அதனால் தேவையில்லாத எந்த ஒரு மென்பொருளையும் நிருவ வேண்டாம். அப்படி நிருவினாலும் பாதுகாப்பை உருதிபடுத்தும் ரெப்பாசிட்டரிகளில் இருந்து மென்பொருளை நிருவவும். முறையாக இயங்குதளத்தை புதுப்பித்து வரவேண்டும். தங்கள் இயங்குதளத்தில் உள்ள பயர்வாலை பயன்படுத்தி தேவையான நுழைவாயில்களை மட்டும் திரந்து வைக்க வேண்டும். இதுவே நம்மை தற்காத்துக்கொள்ள செய்ய கூடிய குறைந்தபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள்.

2 Likes