HOW I CAN INSTALL LINUX IN LEGACY HARDWARE 64BIT

Hi I AM NEW IN LINUX I HAVE 2 GB RAM PC IT ONLY SUPPORT LEGACY SO HOW I CAN INSTALL LINUX MINT IN LEGACY HARDWARE I WANT TO REMOVE WINDOWS ALSO PLS HELP ME GUYS

இங்கு லினக்ஸ் மிண்ட் xfce பதிப்பு உள்ளது. அதை பதிவிரக்கம் செய்து பயன்படுத்துவும்.

Does Linux mint xfce support legacy hardware

https://linuxmint-installation-guide.readthedocs.io/en/latest/choose.html

இங்கே இருக்கும் தகவலை படித்து தெரிந்து கொள்ளவும்

1 Like

நான் Does Linux mint 21 - Xfce Edition நிறுவ பூட் செய்து, முயற்சித்தேன். நிறு இயலவில்லை. சரியான வழிகாட்டுதலை வழங்குங்கள். ஒரு மாத காலமாக இம்முயற்சி நடந்து கொண்டிருக்கின்றது. நன்றி!

லினக்ஸ் மின்டை நிறுவ என்னென்ன காணொலிகள் பார்த்தீர்கள்? அந்தக் காணொலிகளைப் பின்பற்றுவதில் என்ன சிக்கல்கள் வருகின்றன. அப்படிச் சிக்கல் வந்தால் அதில் வரும் பிழைச் செய்தி என்ன? விரிவாகப் பகிர்ந்தால் தானே உதவ வாய்ப்பாக இருக்கும்.

ஏற்கெனவே தமிழ் லினக்ஸ் குழுவில் இருந்து லினக்ஸ் Dual Boot முறையில் நிறுவலுக்குக் காணொலி வெளியிட்டிருக்கிறார்கள். அதன் இணைப்பு:

ஆங்கிலத்தில் இருக்கும் கீழ் உள்ள இணைப்பும் உங்களுக்கு உதவலாம்.

இது தவிரவும் இணையத்தில் நிறைய காணொலிகளை நீங்கள் பார்க்கலாம்.

மென்பொருள் நிறுவலின் போது:

  1. இணைய இணைப்புடன் கூடிய அலைபேசி கையில் வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு படி புரியவில்லை என்றால் இணையத்தில் தேடிக் கொள்ளலாம்.

  2. நிறுவலைத் தொடங்குவதற்கு முன்னர், நிறுவலின் எத்தனைப் படிகள் இருக்கின்றன, அவை என்னென்ன, மிக முக்கியமாக அந்தப் படி என்ன செய்கிறது என்பதைப் புரிந்து வைத்துக் கொள்ளுங்கள். [ஒரு முறைக்கு இருமுறை, ஒரு காணொலிக்கு இரு காணொலி பார்த்து முன்னரே குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வது இதற்கு மிகவும் உதவும்]

  3. மென்பொருள் நிறுவல் என்பது ஒரு மென்பொருள் துறையில் மிக மிக அடிப்படையான ஒன்று. அடிப்படையிலேயே திணறும் அளவு நாம் ஒன்றும் மோசமான ஆள் இல்லை என்று உங்களை நீங்களே நம்புங்கள்.

  4. இந்த நிறுவலை நான் செய்தே தீர்வேன் என்னும் உறுதி, மென்பொருள் நிறுவலின் போது இருக்க வேண்டிய அடிப்படை மனநிலை. அந்த மனநிலை இருக்கிறதா என்று ஒரு முறைக்கு இரு முறை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

  5. இவற்றை மீறிச் சிக்கல் இருந்தாலும் அந்தச் சிக்கலைத் தீர்க்க இணையக்குழுக்கள் இருக்கின்றன, அவற்றிடம் கேட்டுக் கொள்ளலாம். ஆனால், அவர்களைத் தொடர்பு கொள்ளும் போது, நீங்கள் எந்தப் படி வரை போய் இருக்கிறீர்கள், என்ன சிக்கல் / பிழைச் செய்தி வருகிறது என்பதை விரிவாகப் பேசுங்கள். ‘என்னால் நிறுவ முடியவில்லை, உதவுங்கள்’ என்று சொல்வதில் பிறருக்கு உங்கள் வந்திருக்கும் சிக்கல் என்னவென்றே புரிய வழியில்லை அல்லவா? அதைக் கொஞ்சம் உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

  6. ஒரு முறை இயலவில்லை என்பதற்காகச் சோர்வடைய வேண்டாம். ஏற்கெனவே சொன்னது போல, மென்பொருள் நிறுவல் என்பது மிக மிக அடிப்படையான ஒன்று. அடிப்படையே ஆடிப் போகும் அளவு ஆளாக உறுதியாக நாம் இருக்க மாட்டோம்.

  7. எல்லாவற்றிற்கும் மேலாக, மிகவும் பொறுமையாக முயலுங்கள்.