How to increase /home partition in ubuntu 22.04?

hi,
anyone explain how to increase /home partition size [shown in image].
already installed gparted app.

தற்போது 90GB unallocated என்று இருக்கும் இடத்தில் புதிதாக ஒரு பார்டிஷன் உருவாக்கி பின் ext4 file system தில் format செய்யவும். பிறகு இங்கே கூறவும்.

created new partition bro. next?

gparted இயக்கி வரும் திரையை பகிரவும்.

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இந்த கமாண்டுகளை இயக்கவும்

sudo mount /dev/sda11 /mnt
sudo rsync -a --progress /home/ /mnt/
sudo umount /dev/sda11

இவை முடிய சில நிமிடங்கள் எடுத்து கொள்ளும். முடிந்தபின் இங்கே கூறவும். கடவுச்சொல் கேட்டால் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் பயனரில் கடவுச்சொல்லை கொடுக்கவும்.

did second command is running…
can you explain these commands??

man mount
man umount
man rsync

இந்த மூண்று மேனுவல்களையும் படித்து பார்க்கவும்.

still my home path same size?
also if i create any file or folder in home folder that not reflected in sda11.

வேலை இன்னும் முடியவில்லை தோழர், பொருமை.

lsblk -o name,uuid /dev/sda10 /dev/sda11
cat /etc/fstab

இந்த இரண்டு கமாண்டுகளையும் இயக்கி வரும் திரையை பகிரவும்

sudo xed /etc/fstab

இந்த கமாண்டை இயக்கவும். பின் வரும் எடிட்டரில் UUID=46cd26e7 என்று தொடங்கும் வரியில் 46cd26e7-xxxx-xxxx-xxxx-xxxx-xxxx எனும் UUID க்கு பதிலாக 039ae2d6-xxxx-xxxx-xxxx-xxxx-xxxx என்று வரும் UUID ஐ மாற்றுக இந்த xxxx க்கு பதிலாக சரியான UUID ஐ கொடுக்க வேண்டும் அந்த சரியான UUID க்கள் மேலே உள்ள lsblk அவுட்புட்டில் உள்ளன.

மாற்றிவிட்டு File->Save கொடுத்து சேமிக்கவும். பின் இந்த கமாண்டை இயக்கவும்

cat /etc/fstab

வரும் திரையை பகிரவும்.

sudo: xed: command not found

sudo gedit /etc/fstab

xed க்கு பதிலாக gedit பயன்படுத்தவும்.

தோழர், சிக்கல் தீர்ந்து விட்டதா என்று கூறவும்.