I try to install React js in my linux System


எனது லினக்ஸ் சிஸ்டத்தில் ரியாக்ட் ஜேஎஸ் ஐ நிறுவ முயலும் போது இந்த பிழை காட்டுகிறது

1 Like

தங்கள் கணினியில் இணையம் சரியாக வேலை செய்கின்றதா? ctrl-alt-t கொடுத்து வரும் டெரிமினலில்

$ ping -c 3 google.com

கொடுத்து சரிபார்க்கவும்.


இது போன்று தெரிகிறது

நீங்கள் react js நிறுவிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் கொடுத்திருக்கும் screenshot அதற்கானது இல்லை.

அவர் create-react-app பயன்படுத்தி ஒரு புது project உருவாக்க முயற்சிப்பதாகத்தான் தெரிகிறது. அது React JS நிறுவும் முறைதான்.

1 Like

உங்களுக்கு காட்டும் பிழை தொடர்புப் பிழைதான். ஒரு சில சமயம் என் இணைய இணைப்பு இப்படி சில தளங்களின் முகவரிக்கு மட்டும் பிழைகள் காட்டும்.

ping -c 4 npmjs.com

பயன்படுத்தி npm முகவரிக்கு இணைப்பு இருக்கிறதா என்று பாருங்கள். இல்லையெனில், வீட்டில் router பயன்படுத்தினால் அதை ஒரு முறை on/off செய்து முயற்சி செய்து பாருங்கள். கைப்பேசி இணைப்பாக இருந்தால் airplane mode toggle செய்து முயற்சி செய்யலாம்

நேரடியாக create-react-app dependency கொடுக்கும் போது குறிப்பிட்ட பதிப்பு tar தேவைப்படும் . அப்போது இப்படிச் சிக்கல்கள் வருவது இயல்பு.

இதைத் தவிர்க்க, dependency வழியே react நிறுவாமல் npm install tar@6 -g t கொடுத்துப் பாருங்கள். tar இன் பதிப்பு சரியான பிறகு இந்தச் சிக்கல் வராது. பார்த்து உறுதிப்படுத்துங்கள்

3 Likes

இன்று எனக்கும் இந்தச் சிக்கல் வந்தது. நான் வெறுமனே create-react-app test-app என்று கொடுத்தேன். [npxஐ மட்டும் நீக்கிவிட்டேன்]. சரியாக வேலை செய்தது. முயன்று பாருங்கள்.

இதையும் முயற்சிக்கலாம்

React app create செய்துவிட்டேன்
தனி ஒரு Folder Create செய்யதால் Run ஆகவில்லை.
இப்போது இயங்குகிறது,
குழுவிற்கு நன்றி

2 Likes