Internetspeed boost

Hi I am using windows operating system and my neighbor’s wifi is available two points but internet speed is slow. Now i am using linux mint same two point neighbor wi-fi is available but internet speed is faster on linux than windows does linux do some special function for this

முதலில்,

  1. அடுத்தவர் வீட்டு WiFi நெட்வெர்க்கை அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் அது தவறு. அனுமதி முன்பே பெற்றிருந்தால் நல்லது, அப்படி இல்லை எனில் அவர் அனுமதி பெற்று பயன்படுத்தவும்.
  2. விண்டோசில் எப்படி இணைய இணைப்பின் வேகத்தை கனக்கிடுகின்றீர்கள்?
  3. லினக்சில் எப்படி இணைய இணைப்பின் வேகத்தை கனக்கிடுகின்றீர்கள்?

இவை இரண்டும் தெரிய்தால்தான் ஏன் லினக்ஸ் வேகமாக உள்ளது என்பதை அரிய முடியும்.

II am test speed test. Com
This for linux →

This for windows ----->

இந்த திரையில் தாங்கள் காண்பது பிரவுசர் பிராசஸ்சிற்கு கிடைக்கும் வேகம், இயங்குதளத்தில் பிரவுசர் பிராசஸ் போல் பல பிராசஸ்கள் இயங்கி கொண்டுள்ளன அவையும் இணையத்தில் ஏதாவது செய்துகொண்டிருந்தால் பிரவுசர் பிராசஸ்சிற்கு முழூ வேகமும் கிடைக்காது.

விண்டோசில் வேகம் குறைவாக காட்ட பல காரணங்கள் உள்ளன, முக்கியமாக விண்டோசில் இயங்கும் சில முக்கிய பேக்கிரண்டு பிராசஸ்கள் எப்பொழுதும் இணையத்தில் இருந்து ஏதாவது ஒன்றை பதிவிறக்கிக்கொண்டிருக்கும் அல்லது பதிவேற்றிக்கொண்டிருக்கும். லினக்சில் இதுபோல் நடப்பது மிக குறைவு.

இந்த காரணத்தால் லினக்சில் வேகம் அதிகமாகவும் விண்டோசில் வேகம் குறைவாகவும் காட்ட வாய்ப்பு உள்ளது. மேலும் விண்டோசில் இருக்கும் WiFi டிரைவரும், லினக்சில் இருக்கும் WiFi டிரைவரும் முற்றிலும் வேறுபட்டவை. அதனாலும் வேகத்தில் வித்தியாசம் இருக்கலாம்.

அதனால் விண்டோசில் இருப்பதை லினக்சில் எதிர்பார்காதீர்கள், அதேபோல் லினக்சில் இருப்பதை விண்டோசில் எதிர்பார்காதீர்கள். அப்படி எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும், ஏனெனில் இரண்டுமே முற்றிலும் மாறுபட்டவை.

2 Likes