Is there any possiblities of booting MBR and GPT partitioned OS in single grub menu?

I have two drive 1 is HDD partioned with MBR and having 2 OS

  1. Ubuntu
  2. Windows
    another one is SSD partioned with GPT it has

1.Windows

can I have a single Boot menu for all three OS ?

முயற்சி செய்து பார்த்தீர்களா?

இங்கே கிரப்பின் இரண்டாம் நிலை லோடரை அடைவதுதான் முக்கியம், அதை லோட் செய்துவிட்டால் அதில் இருந்து எந்த டிஸ்கையும் அதில் உள்ள பார்டிஷன்களில் இருந்தும் பூட் செய்யலாம். உங்கள் கணினியின் பயாசில் எந்த வகையில் தாங்கள் பூட் செய்கிறீர்களோ அதை பொருந்து முதல் டிஸ்கில் உள்ள grub.cfg போப்பையோ அல்லது இரண்டாவது டிஸ்கில் உள்ள grub.cfg கோப்பையோ மற்ற டிஸ்கில் உள்ள OS களை பூட் செய்யுமாறு மாற்றம் செய்ய வேண்டி இருக்கும். மற்றபடி இந்த வகை பூட் செய்வது சாத்தியமே.

முயற்சி செய்து சிக்கல் வந்தால் இங்கே பகிருங்கள்.

என்னுடைய கணினி தகவமைப்பை பின்வரும் புகைப்படத்தில் பதிவிட்டுள்ளேன்

இதில்

CT250 விண்டோஸ் 10 இயங்குதலத்தை கொண்டுள்ளது

ST500 என்று குறிப்பிட்டப்பட்டுள்ள வன்வட்டில் உபுண்டு மற்றும் ஒரு விண்டோஸ் உள்ளது

ST500 வன்வாட்டில் உள்ள கிரப் கஸ்டமைசரில் CT250 விண்டோஸ் ஓஎஸ் இன் பேத்தை தரும் பொழுது கரப் மெனு பிழை செய்து ஏதும் தரவில்லை மாற்றாக டிவைஸ் நாட் பவுண்டு என்ற பிழை செய்தியை கொடுத்துவிட்டு வெளியேறிவிடுகிறது

Windows 10 SSD EFI GPT என்பதை தேர்வு செய்து Enter அழுத்தாமல் e அழுத்தவும். வரும் தகவலை பகிரவும்.


நீங்கள் கேட்டது :point_up:

இ்ந்த என்டிரியை நீங்களாக உரூவாக்கினீர்களா? அல்லது Grub-Customizer உருவாக்கி கொடுத்ததா?

கிரப் கஸ்டமைசர் தானியங்கி முறையில் மற்றொரு வன்வட்டிளுள்ள விண்டோஸ் இயங்குதளத்தை கண்டறிய இயலவில்லை ஆகவே நான் வன்வட்டில் வின்டோஸ் இயங்குதளம் உள்ள பிரிவை (partition) கொடுத்த போது கிரப் எழுதிய தொடக்க கட்டளைகள் இவை.

ஏன் EFI பார்டிஷனை விண்டோஸ் பார்டிஷன் என்று குறிப்பிட்டு்ள்ளீ்கள்? EFI பார்டிஷன் UEFI பயாசை சார்ந்தது, அது விண்டோஸ் தொடர்புடைய பார்டிஷன் அல்ல. உங்கள் உண்மையான விண்டோஸ் பார்டிஷனை கொடுத்து பாருங்கள். மீண்டும் சிக்கல் வந்தால் இதே போண்ற தகவலை இங்கே பகிருங்கள்.


உண்மையான விண்டோஸ் பார்ட்டிஷன் என்று எதை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்

என்னுடைய கணினியில் இரு விண்டோஸ் உள்ளது
/dev/sdb1 ல் ஒரு விண்டோஸ் இயங்குதளம் உள்ளது அது grub ஆள் தானமைவாகவே இயங்குதள பட்டியலில் வந்தது
/dev/sdb5 ல் ஒரு உபுண்டு இயங்குதளம் உள்ளது அதுவும் grub ல் தனமைவாகவே பட்டியலில் வந்தது
/dev/sda3 ல் ஒரு விண்டோஸ் இயங்குதளம் உள்ளது இது grub ல் தானாக பட்டியலிடப்படவில்லை
/dev/sda3 ஐ தான் நீங்கள்உண்மையான விண்டோஸ் பார்ட்டிஷன் என்று குறிப்பிடுகிறீர்களா ?

விண்டோசின் c: எங்கு உள்ளதோ அதை Grub Customizer ரிடம் கொடுத்து பார்க்கவும். அனேகமாக /dev/sda3 ஆக இருக்க வாய்ப்பு உள்ளது.

/dev/sda3 யை கொடுத்துப் பார்த்துட்டேன் ஆனாலும் எனக்கு NO Such device

அப்புடிங்குற மெசேஜ் வந்து to continue press any key என்று கூறி வெளியேறுகிறது பின்னர் grub நிறுவப்பட்டுள்ள வன்வட்டிலுள்ள விண்டோஸ் இயங்குதளம் வருகிறது.

ஒரு தற்காலிக தீர்வு கிடைத்தது
பின்னர் ssd ல் உள்ள விண்டோஸ் இயங்குதளத்தில் இருந்து bcdboot கமன்ட் ஐ பயன்படுத்தி இரண்டாம் வன்வட்டிலுள்ள உபுண்டு மற்றும் விண்டோஸ் ஐ விண்டோஸ் பூட் நிர்வாகியில் இணைத்து விட்டு அங்கிருந்து உபுண்டுவை இயக்க முடிகிறது.

grub அய் ஆராய்ந்து பயன்படுத்த எனக்கு காலம் குறைவாக இருப்பதால் இத்துடன் நான் இந்த தலைப்பை முடிக்கிறேன்