.json file not generating from libre office calc

நான் LinuxMint 21.1ஐ பயன் படுத்துகிறேன். அதில் என் தொழிலுக்காக ஒரு File-ஐ libre Office Cale-லிருந்து .json-ஐ Generate செய்ய முயன்றால் ஆகா வில்லை. Macros-ஐயும் Low-ஆகா மாற்றிவிட்டேன், ஆனாலும் .jsonஆகா Generate-ஆகாவில்லை, எவ்வாறு File-ஐ Generate செய்வது, உதவவும்.

Can you help by telling how your data is organised in sheets and the structure you expect in json?


when i try in ms office (windows) file generating, but when i try in linux its not generating, please help

தாங்கள் லிபரி ஆப்பீஸ் கேல்கில் திறந்து .json க்கு மாற்ற முயற்சி செய்யும் கோப்பு எந்த வகை? .xlsx அல்லது .xls கோப்பு வகையா?

sir. properties-ல் பார்த்தால் அது .xlsm-என்று வருகிறது.

இந்த வகை கோப்புகள் மைக்ரோசாப்டின் VBA (Visual Basic Application) மேக்ரோக்கள் வைத்து உருவாக்கப்பட்டிருக்கும், அவைகள் லிபரி ஆப்பீசில் இயக்கும் என்பதற்கு எந்த உருதியும் இல்லை.

முடிந்தால் அதில் உள்ள மேக்ரோக்களை லிபரி ஆப்பீஸ் கேல்கில் இயங்க செய்து பிறகு json உருவாக்க முயன்று பார்க்கவும்.

லிபரி ஆப்பீஸ் கேல்கில் தான் முயற்சி செய்கிறேன். ஆனால் முடிய வில்லை.

தோழர், மேலே கூறியதை கவனமாக படியுங்கள், தாங்கள் முதலில் விண்டோஸ் எக்சல் மேக்ரோக்களை சரியாக லிபரி ஆப்பீஸ் கேல்க் மேக்ரோக்களாக மாற்ற வேண்டும். அதன் பிறகுதான் அதை லிபரி ஆப்பீஸ் கேல்கில் பயன்படுத்த முடியும்.

மேக்ரோக்களை மாற்றாமல் கோப்பை மட்டும் லிபரி ஆப்பீஸ் கேல்கில் ஓப்பன் செய்வதால் எந்த ஒரு பயனும் இல்லை.

1 Like

நன்றி sir, எக்சல் மேக்ரோக்களை எவ்வாறு லிபரி ஆப்பீஸ் கேல்க் மேக்ரோக்களாக மாற்றுவது என்று சொல்ல முடியுமா. நான் linux-ற்கு புதிது அதுதான் கேட்கிறேன்.

தோழர், இந்த இணைப்பை பயன்படுத்தி கேல்க் மேக்ரோக்களை பற்றி தெரிந்து கொள்ளவும்.

https://documentation.libreoffice.org/assets/Uploads/Documentation/en/GS5.1/HTML/GS5113-GettingStartedWithMacros.html

thanks bro