Linux mint - ல் keyboard - ஐ பயன்படுத்தி தங்களிஷில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி

அப்படி செய்துவிட்டு முழூ திரையை நிழற்படம் எடுத்து அனுப்பவும்.

நீங்கள் கொடுத்த கமென்டை இயக்கி பின்பு வேலை செய்தது ஆனால் நான் system logout செய்து மீண்டும் login செய்யும்போது திரும்பவும் வேலை செய்ய வில்லை. திரும்ப நீங்கள் கொடுத்த கமெண்டை இயக்கிய பின்பு வேலை செய்கிறது அது ஏன்? நிரந்தரமாக எப்படி பயன்படுத்துவது?

cinnamon-settings keyboard

இந்த கமாண்டை கொடுத்து வரும் திரையில் Layouts தேர்வு செய்து பின் இடது புறம் இருக்கும் கட்டத்தில் English (US) மட்டும் வரும்படி வைக்கவும். மற்ற எல்லா லேயவுட்களையும் தேர்வு செய்து கீழே - மைனஸ் கொடுத்து நீக்கவும்.

நீக்கி விட்டு மூடிவிடவும். பின் கணினியை ரீபூட் செய்யவும். இப்போது Win+space கோர்வையை அழுத்தினால் தமிழ் பொனாடிக் வருகின்றதா என்று பார்க்கவும்.


நீங்கள் கூறியவாறு செய்துவிட்டு win+space அழுத்தினாள் தமிழ் பொணட்டிக்
வருகிறது ஆனால் நான் தட்டச்சு செய்யும் பொழுது தமிழ் தட்டச்சு வரவில்லை மாறாக ஆங்கிலத்தில் தான் தட்டச்சு ஆகிறது

லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் கொடுத்து xed என்று தட்டச்சு செய்து வரும் எடிட்டரை துவக்கவும். பின் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இந்த கமாண்டை இயக்கவும்

(tr \\0 \\n < /proc/$(pgrep xed)/environ; echo) | grep 'IM'

வரும் தகவலை பகிரவும்

cat ~/.xinputrc; cat /etc/X11/xinit/xinputrc

இந்த கமாண்லைனை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

image

xed ~/.xinputrc

கொடுத்து வரும் எடிட்டரில் xim க்கு பதிலாக ibus என்று வைக்கவும். பின் File->Save கொடுத்து சேமிக்கவும். பிறகு ரீபூட் செய்யவும். ரீபூட் செய்து பிறகு எடிட்டர் துவக்கவும். இப்போழுது win+space கொடுத்து தமிழ் தேர்வு செய்து தட்டச்சு செய்யவும். தமிழில் தட்டச்சு நடக்கின்றதா என்று பார்க்கவும்.

1 Like

தற்போது வேலை செய்கிறது நன்றி

3 Likes

மகிழ்ச்சி