Linux mint - ல் keyboard - ஐ பயன்படுத்தி தங்களிஷில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி

Linux mint - ல் keyboard - ஐ பயன்படுத்தி தங்களிஷில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி

எந்த தங்களிஷை குறிப்பிடுகின்றீர்கள். தங்களிஷுக்கு உதாரனம் தாருங்கள். எனக்கு தெரிந்தவரை ஆங்கிலத்தில் தமிழை தட்டச்சு செய்வதே தங்களிஷ் என்பார்கள். அதை சாதாரனமாகவே லினக்ஸ் மிண்டில் செய்யலாம்.

அல்லது தாங்கள் தமிழ் Phonetic முறையை கேட்கின்றீர்களா?

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் தங்களிஷ் முறை எப்படி?

தங்களிஷ் முறை என்றால் என்ன? சற்று வரிவாக கூறவும்.

1 Like

நான் எனது வலைப்பதிவை இங்கு குறிப்பிட்டுள்ளேன் . இது தங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன் Tamil Keyboard Installation in LinuxMint

2 Likes

நான் எனது கணினியில் தமிழ் phonetic keyboardஐ இணைப்பதற்க்கு முயற்ச்சித்தேன் ஆனால் என்னால் இணைக்க இயலவில்லை நான் இதற்க்காக மேற்கொண்ட வழிமுறையை Blog ஆக எழுதியுள்ளேன் அதற்கான இணைப்பைக் கீழே கொடுத்துள்ளேன் யாராவது சரிபார்த்து சொல்லுங்கள்

1 Like

மேலே ஜெஸ்லின் அவர்கள் பகிர்ந்திருக்கும் வலைப்பூவில் உள்ள படி(Steps)களுக்கும் உங்கள் வலைப்பூ பதிவில் உள்ள படி(Steps)களுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றனவா எனப் பாருங்களேன். அப்படி இருந்தால் அதைச் செய்து பாருங்கள். இல்லாவிட்டால் மீண்டும் இங்கே பதியுங்கள்.

4 Likes

அவர்கள் வளைப்பூவில் பதிவிட்டுள்ளதையும் முயர்ச்சித்துள்ளேன் ஆனாலும் சரிவர இயங்கவில்லை

ஏதேனும் பிற வழிமுறைகள் உள்ளனவா அல்லது நான் பின்பற்றிய வழிமுறை தவறானதா

எதை முயற்சித்தீர்கள்? எது சரிவர இயங்கவில்லை?

முதலில் நான் ஒரு வழிமுறையை பின்பற்றி தமிழை இயக்க முயன்றேன் அந்த வழிமுறையை blog எழுதியுள்ளேன் அதன் இணைப்பை மேலே கொடுத்துள்ளேன் மேலும் ஜெஸ்லின் அவர்களின் வலைப்பூவில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையையும் பின்பற்றினேன் ஆனாலும் தமிழை எனது கணினியில் இயக்க இயலவில்லை

இதற்கு மிக்க நன்றி அது வேலை செய்கிறது.

1 Like

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இந்த கமாண்டை இயக்கவும்

ibus list-engine | grep :ta:

இயக்கி வரும் தகவல்களை பகிரவும்.


Install செய்த பிறகு நன்றாக வேலை செய்தது logout செய்து பின் login செய்ததும் வேலை செய்யவில்லையா இந்த (image - இல் உள்ள) பிரச்சினை ஏற்படுகிறது

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இந்த கமாண்டை இயக்கவும்

ibus-daemon -xdr

இயக்கிய பின் மீண்டும் முயற்சித்து பாருங்கள்

image

ibus read-config | grep -E 'triggers:|preload-engines:'

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

image

இப்போது தங்கள் டெஸ்க்டாப்பில் கீழ் வலது மூலையில் ‘EN’ என்று காட்டுகின்றதா? அப்படி காட்டவில்லை எனில் தங்கள் டெஸ்க்டாப்பின் முழு திரையையும் நிழற்படம் எடுத்து அனுப்பவும்.

En என்று காட்டவில்லை அதற்கு மாறாக Flag காட்டுகிறது நான் எனது keyboard ல் super+space அழுத்தினாள் அது இந்திய தேசியக் கொடியாக மாறுகிறது அப்பொழுது தமிழ் inscript Keyboard இணைகிறது என்னால் தமிழ் phonetic இயக்க இயலவில்லை