Linux mint os dual boot problem

"Hey, I’m trying to install Linux Mint alongside Windows on my Asus laptop, but I’m getting an error during boot that says:

‘Failed to open \EFI\BOOT\mmx64.efi - Not Found’
‘Failed to start MokManager: Not Found’
‘Something has gone seriously wrong: import_mok_state() failed’
It seems like a Secure Boot or EFI boot issue. Can you help me fix the bootloader or guide me on how to reinstall the GRUB properly?"

மீன்டும் லினக்ஸ் மிண்ட் நிருவவும். சிக்கல் வந்தால் இங்கே கூறவும்

1 Like

இன்னும் சரி ஆக வில்லை

  1. நீங்கள் லினக்ஸ் மிண்ட் நிறுவ ஏதேனும் வழிமுறையை பின்பற்றுகின்றீர்களா?
  2. எந்த முறையில் லினக்ஸ் மிண்ட் யூஎஸ்பி உருவாக்கினீர்கள்?
  3. விண்டோசில் பிட்லாக்கர் டிசேபில் செய்துவிட்டீர்களா?
  1. ஆம்
  2. நான் rufus மூலம் லினக்ஸ் மின்ட் உருவாக்கினேன்
    3.விண்டோசில் பிட்லாக்கர் டிசேபில் செய்துவிட்டேன்

எந்த வழிமுறையை பின்பற்றுகின்றீர்கள், அத்தகவலின் இணைப்பு இருந்தால் இங்கே பகிரவும்.

https://etcher.balena.io/ இதை பயன்படுத்தி உங்கள் லினக்ஸ் மிண்ட் யூஎஸ்பி உருவாக்கவும். பின் நிறுவி பார்க்கவும். சிக்கல் வந்தால் இங்கே கூறவும்.

https://etcher.balena.io/ 1 இதை நான் பயன் படுத்தி விட்டேன், இதுவும் வேலை செய்ய வில்லை

லினக்ஸ் மிண்ட் .iso கோப்பை மீண்டும் பதிவிறக்கம் செய்யவும். பின் Balena Etcher வழியாக மீண்டும் லினக்ஸ் மிண்ட் யூஎஸ்பி உருவாக்கவும். பின் அதை வைத்து முயற்சி செய்யவும். சிக்கல் வந்தால் இங்கே கூறவும்.


நீங்கள் சொன்னதை செய்தேன், மீண்டும் அதே சிக்கல்

லினக்ஸ் மிண்ட் யூஎஸ்பி பயன்படுத்தி லைவ் பூட் செய்யவும். பின் லினக்ஸ் மிண்டை நிறுவாமல் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

sudo fdisk -l
sudo findmnt --df

இந்த இரண்டு கமாண்டுகளையும் இயக்கி வரும் தகவலை இங்கே பகிரவும்.

நான் முதல் முறையாக லினக்ஸ் மின்ட் உருவாக்கிநேன் , அதை dual boot செய்தேன் அப்போது லினக்ஸ் மின்ட் இன் ஹோம் பேஜ்கு சென்றது, அங்கே லினக்ஸ் மின்ட் இன்ஸ்டால் என்று CD படத்துடன் இருந்தது, அதை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்த போது அது ஒரு இரவு முழுவதும் லோடிங் ஆகியது, ஒரு பத்து மணி நேரமமாகா முடியவில்லை


, எனவே நான் அதை cancel செய்து விட்டேன், மறு முயற்சி செய்தபோது

இந்த error வந்து

இங்கே கூறி உள்ளதை செய்து பதில் அளிக்கவும்.

இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.

Bro Make sure you disable the secure boot that might be the reason why the efi bootloader is getting deleted

இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் சிக்கல் தீர்க்கப்படவில்லை என்று முடிக்கிறோம்.