கணினி தொடங்குவதற்குக் கிட்டத்தட்ட ஐந்து நிமிட காலம் எடுத்துக் கொள்கிறது. தொடங்கிய பிறகு, எந்தச் சிக்கலும் இல்லை. startup applicationsஇலும் எதையும் சேர்க்கவில்லை. Update Managerஇலும் எல்லாம் இற்றைப்படுத்தப்பட்டு (up to date) உள்ளது. எப்படிச் சரிசெய்வது?
Linux Mint 21.3 Cinnamon
Kernel: 6.8.0.47-generic
systemd-analyze plot | curl --data-binary @- https://paste.rs; echo
இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை இங்கே பகிரவும்.
journalctl -k | curl --data-binary @- https://paste.rs; echo
இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.
lsusb -vt
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
/: Bus 02.Port 1: Dev 1, Class=root_hub, Driver=xhci_hcd/6p, 10000M
ID 1d6b:0003 Linux Foundation 3.0 root hub
/: Bus 01.Port 1: Dev 1, Class=root_hub, Driver=xhci_hcd/12p, 480M
ID 1d6b:0002 Linux Foundation 2.0 root hub
|__ Port 10: Dev 2, If 0, Class=Wireless, Driver=btusb, 12M
ID 0cf3:e500 Qualcomm Atheros Communications
|__ Port 10: Dev 2, If 1, Class=Wireless, Driver=btusb, 12M
ID 0cf3:e500 Qualcomm Atheros Communications
udevadm test --action=add /sys/bus/usb/devices/1-6 2>&1 | curl --data-binary @- https://paste.rs; echo
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
உங்கள் கணினியில் ஒரு USB டிவைஸ் உள்ளது, அது பழுதடைந்துள்ளது. லினக்ஸ் பூட் ஆகும் போது அந்த பழுதடைந்த டிவைசை லினக்ஸ் மீண்டும் மீண்டும் ரீசெட் செய்ய முயற்சிக்கின்றது. சில விணாடிகள் கழித்தே அந்த டிவைசை ரீசெட் செய்வதை நிறுத்துகிறது. மீண்டும் மீண்டும் ரீசெட் செய்ய தேவைப்படும் நேரமே உங்கள் கணினி தாமதமாக பூட் ஆவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
புதிதாக ஒரு லினக்ஸ் மிண்ட் லைவ் யூஎஸ்பீ உருவாக்கவும். அதை வைத்து பூட் செய்து பார்க்கவும். லைவ் யூஎஸ்பியில் பூட் ஆவதற்கும் உங்கள் கணினியில் உள்ள டிஸ்கில் இருந்து பூட் ஆவதற்கும் பெரிய வித்யாசம் இல்லை எனில் மேலே உள்ளதுதான் காரணம். அப்படி இல்லை எனில் மீண்டும் எங்கு பிழை உள்ளது என்று தேடவேண்டும்.