Linuxmint Hp hangs often

While using linuxmint with dual boot I’ll face the issue of getting struck(hangs)
Recently installed Linux Mint 22 cinnamon.

லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி Administration மெனுவிற்குள் இருக்கும் Driver Manager ஐ கிளிக் செய்து துவக்கவும். அது உங்கள் கணினியில் ஏதேனும் டிரைவர் தேவைப்படுகின்றதா என்று தேடி முடித்து காட்டும். அந்த திரையை பதிவு (Screenshot) எடுத்து இங்கே பகிரவும்.

It appears like this.

ஒரு நாளைக்கு எத்தனை முறை ஹேங் ஆகின்றது? அல்லது நீங்கள் ஏதேனும் கணினியில் செய்யும்போது தவறாமல் ஹேங் ஆகின்றதா?

Compulsory twice a day sir. Not any specific application like that. While normal usage also it’s hangs.

journalctl --list-boots | sed -n '1p;/^ *\-10/,$p'

இந்த கமாண்டை ctrl-alt-t தட்டச்சு கோர்வையை அழுத்தி வரும் டெர்மினலில் இயக்கவும். வரும் வெளியீட்டில் FIRST ENTRY மற்றும் LAST ENTRY என்ற நெடுவரிசைகளில் (Columns) தேதிகள் நேரத்துடன் குறிப்பிடப்பட்டிருக்கும். ஹேங் நடந்தது LAST ENTRY ல் உள்ள தேதி மற்றும் நேரத்திற்கு முன்பு நடந்திருந்தால் அதே வரிசையில் IDX என்ற நெடுவரிசைக்கு நேராக உள்ள எதிர்மறை எண்ணை (Negative Number) குறித்துக்கொள்ளவும். பின்

journalctl -b <negative number> | curl --data-binary @- https://paste.rs; echo

இந்த கமாண்டை இயக்கவும். இதில் <negative-number> என்பதற்கு பதிலாக முன்பு குறித்துக்கொண்ட எதிர்மறை எண்ணை பயன்படுத்தவும். இந்த கமாண்ட்லைன் இயங்கி முடிந்தவுடன் ஒரு இணைய இணைப்பு (URL) வெளியீடாக வரும். அந்த இணைப்பை இங்கே பகிரவும்.

By following these steps I have got the link sir https://paste.rs/27MDJ

ஹேங் ஆன முழூ தகவலும் கிடைக்கப்படவில்லை மீண்டும்

இங்கே உள்ள தகவலை படியுங்கள், ஆனால் இந்த முறை

journalctl -b <negative-number> | tee ~/Downloads/hang-logs.txt

இந்த கமாண்டை இயக்கவும். இப்போதும் <negative-number> என்பதற்கு பதிலாக முன்பு குறித்து வைத்த எதிர்மறை எண்ணை பயன்படுத்தவும். இது Downloads போல்டரில் hang-logs.txt என்று ஒரு கோப்பை உருவாக்கும் அதை உங்கள் கூகிள் டிரைவில் அப்ளோட் செய்துவிட்டு பின் கூகிள் டிரைவில் அப்ளோட் செய்யப்பட்ட கோப்பின் இணைய இணைப்பை இங்கே பகிரவும். கூகிள் டிரைவ் வழியே எப்படி கோப்பை பகிர்வது என்பதை கீழே உள்ள யூடியூப் நிகழ்படத்தில் காணலாம்.

File Link:https://drive.google.com/drive/folders/1grBIlc7_Md5OO0gb78tuJfVP5nkijrQY?usp=drive_link

du -sh /var/log/journal

இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

577M /var/log/journal

tar cvzf ~/Downloads/journal.tar.gz -C /var/log/journal .

டெர்மினலில் இந்த கமாண்டை இயக்கவும். அது Downloads போல்டரில் journal.tar.gz என்ற கோப்பை உருவாக்கும். பின் அதை உங்கள் கூகிள் டிரைவில் முன்பு உருவாக்கிய அதே Files to share என்ற இடத்தில் அப்லோட் செய்துவிட்டு இங்கே கூறவும்.

I have upload it sir.

கணினி ஹேங் ஆகும்போது உங்களால் ctrl-alt-F6 அழுத்த முடிகின்றதா என்று பார்க்கவும். அப்படி முடிந்தால் இங்கே கூறவும்.

Sir currently my laptop is working properly. So When it hangs I’ll try the command and conveys the message to you.

Again my laptop hangs while using. Its not working after pressing ctrl-alt-F6.

ஹேங் ஆகும்போது திரையில் என்ன தெரிகின்றது? அதை திரைப்பதிவு (screenshot) எடுத்து இங்கே பகிரவும்.

சரி, மீண்டும் ஹேங் ஆகும்போது alt + PrintScreen + s என்பதை அழுத்தவும். பின் கணினியை ரீபூட் செய்யவும். பின்

journalctl -b -1 | tee ~/Downloads/hang-logs.2.txt

இந்த கமாண்டை இயக்கவும். இது Downloads/ போல்டரில் hang-logs.2.txt என்று ஒரு கோப்பை உருவாக்கும் அதை உங்கள் கூகிள் டிரைவிற்கு அப்ளோட் செய்துவிட்டு இங்கே தெரியபடுத்தவும்.

I have upload it.