Mlterm செயலி fedora வில் நிறுவுவது எப்படி?

இதில் mlterm செயலி உபுண்டு லினக்ஸில் நிறுவுவது பற்றி மிகவும் தெளிவாக உள்ளது.

நான் fedora 41 லினக்சு பயன்படுத்துகிறேன். இதற்கான நிறவுதல் வழிமுறைகளை அனுப்புக. மிக முக்கியமாக இதற்கான சார்பு தொகுப்புகளை நிறுவுதலை குறிப்பிடுக.

அல்லது, xfce-terminal வழியாக, தமிழில் டெர்மினல் தெரிய வைக்க முடியுமா?

சார்புகளை நிருவ

$ sudo yum install libharfbuzz-dev libgtk-3-dev libfreetype6-dev libcairo2-dev

பயன்படுத்தவும். மற்றவை எல்லா Linux பகிர்வுகளுக்கும் ஒன்றுதான்.

mlterm நிறுவி விட்டேன். ஆனால் Ctrl + Right mouse click செய்தால் அமைப்பு வரவில்லை.

./main/mlterm -otl

வேலை செய்யவில்லை. வெறும்

./main/mlterm

மட்டும் வேலை செய்கிறது.

$ git clone https://github.com/arakiken/mlterm.git
$ cd mlterm
$ ./configure

கடைசி கட்டளை தந்த பிரகு திரையில் இந்த வரி வருகிறதா என்று தெரிவிக்கவும்:

OpenType Layout                   : yes (harfbuzz)

ஆம். வருகிறது

இதிலுள்ள சார்பு தொகுப்புகள், fedora வில் மாறுகிறது.

sudo dnf install gtk3-devel cario2-devel freetype-devel harfbuzz-devel

மீதியுள்ள நிரல் கட்டளைகள், @VigsVj அளித்த linux பகிர்வில் உள்ளது.

1 Like