Recover os

வணக்கம்

எனது Ubuntu யில் root partition resize - Shrink செய்து பாத்தேன். Disks application பயன்படுத்தி அப்போது partition busy என்று வந்தது இப்போது boot ஆக வில்லை உதவுங்கள்.

இப்போது boot ஆக வில்லை

திரையில் என்ன செய்தி வருகிறது?
எது வரை உள்ளே செல்கிறது?

இந்த தகவல்கள் ஏதும் இல்லாமல், பதில் சொல்வது கடினம்.
கேள்வி எழுதும் போதே, கூடுமானவரை எல்லா தகவல்களையும் தருக.

நாங்கள் யாரும் உங்கள் அருகில் அமர்ந்து உங்கள் திரையை பார்த்துக் கொண்டிருக்க வில்லை.
நீங்கள் தான் முழு விவரங்களையும் தர வேண்டும்.

இதே கேள்வியை நீங்கள் படித்தால், உங்களுக்கு திரையில் என்ன நிகழ்கிறது என்று தெரிந்து கொள்ள முடிகிறதா?

தந்துள்ள தகவல்களைக் கொண்டு, பிறர் என்ன பதில் சொல்ல முடியும் என்று யோசித்து, எப்போதும் கேள்விகளோடு, கூடுமான எல்லா விவரங்களையும் தருக.

எந்த விவரமும் தரப் படாததால், என்னால் சொல்லக்கூடிய ஒரே பதில் இதுதான்.

root partition ல் சிக்கல் எனில், மீண்டும் OS நிறுவது நல்லது.

grub Screen தெரிகிறது
Ubuntu Click செய்த பிறகு boot logo வருகிறது அது மற்றுமே திரையில் தெரிந்து கொண்டே இருக்கிறது.

login manager தெரியவில்லை
login manager - lightdm பயன்படுதுகிறேன்

இதுவரை 3 முறை OS reinstall செய்து விட்டேன்

  • login Screen loop யில் முதல் முறை
  • Python upgrade செய்யும் போது இரண்டாவது முறை
  • package சரியாக update ஆகாததால் மூன்றாவது முறை

அப்போது இதை எல்லாம் reinstall செய்ய எனக்கு நேரம் இருந்தது. கல்லூரி படித்து கொண்டு இருந்தேன்.

ஆனால் இப்போது நேரம் இல்லை. இவ்வாறு சிறு சிறு தவறுகள் செய்யும் போது எல்லாம் reinstall என்றால் linux பயன்படுத்தும் ஆர்வமும் linux os சரி செய்ய வேண்டும் என்ற என்னமும் சிறிது சிறிதாக தரிய தொடங்கிவிடும்

boot logo தெரியும் போது ESC அழுத்தினால், பின்னால் நடக்கும் நிகழ்வுகளுக்கான விவரங்கள் தெரியும்.

அதில் உள்ள பிழைச்செய்தியைக் கண்டு இங்கு பகிர்க.

லினக்ஸ் என்பது ஒரு நல்ல வாகனம் மாதிரித்தான்.
உள்ளதை உள்ளவாறு பயன்படுத்தினாலோ, அல்லது அடிப்படைகளை அறிந்து மாற்றங்கள் செய்தாலோ சிக்கல் இல்லை.

ஓடிக்கொண்டிருக்கும் வண்டியில் பெட்ரோல் டாங்கிற்கு செல்லும் ஒயரை பிடுங்கிவிட்டு, ஒரு சின்ன வயரைத்தான் வெட்டினேன். அதற்கே வண்டி கவிழ்ந்து விட்டது என்று சொல்ல மாட்டோம் தானே.

ஆயினும், லினக்சை பல வழிகளில் பகுத்து ஆய்ந்து பல்வேறு செயல்கள் செய்து, பலவற்றில் சிக்கல் உண்டாக்கி, அவற்றை தீர்க்க முயன்று, பல முறை நிறுவி மட்டுமே நன்கு கற்க முடியும்.

எனவே, நீங்கள் சரியான பாதையில் தான் உள்ளீர்கள்.

சிக்கலை நீக்க ஆய்ந்து பார்க்கும் சில மணி நேரங்கள் இல்லாத போது, 20 நிமிடங்களில் மீண்டும் நிறுவுவது விரைவானது.

என்னுடைய Linux root partition னுக்கு என்ன ஆனது?

ஒரு சாதாரன partition யை சரியான முறையில் எப்படி resize செய்வது

என்ன பிழைச்செய்தி வருகிறது என்று தெரியாமல் எப்படி பதில் சொல்வது?

சாதாரண partition ஐ மாற்றி அமைக்க, gparted போதும்.

ஆனால் root partition ஐ மாற்றுவது என்பது Open Heart Surgery போல, உயிரோடு இருக்கும் மனிதரின் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்வது போல. அதிக கவனம் தேவை.

அனுபவம் இல்லையெனில், கூடுமானவரை root partition ஐ மாற்றுவதை தவிர்க்க வேண்டும்.

ஆனால் இது போல, பல முறை செய்து தான் அனுபவம் பெற இயலும்.

நல்ல அனுபவம் பெற, GUI கருவிகள் தவிர்த்து, command line கருவிகள் கற்கவும்.

என்ன சிக்கல் வருகின்றது என்பதை பொருத்தே மேற்கொண்டு என்ன செய்ய முடியும் என்பதை தீர்மானிக்க முடியும், முதலில்

  1. கிரப் மெனு வரும்போது முதல் வரியில் வைத்து e தட்டச்சில் அழுத்தவும்.
  2. பின் வரும் திரையில் ஒரு வரியில் quiet மற்றும் splash என்று இருக்கும், இந்த இரண்டு வார்த்தைகளையும் அந்த வரியில் இருந்து நீக்கிவிட்டு ctrl-x தட்டச்சு கோர்வையை அழுத்துங்கள், இப்போது உங்கள் உபுண்டு பூட் ஆகி ஒரு இடத்தில் வந்து நிற்கும். அப்போது திரையை பதிவு எடுத்து (Take photo from your mobile) இங்கே பகிரவும்.

tty வந்தது. login செய்தேன்

df -h

இயக்கி அதன் output ஐ பகிர்க.

/ partition முழுதாக நிரம்பி இருக்கலாம்.

உதவியதுக்கு நன்றி

நீங்கள் சொன்னதைப்போல் reinstall செய்து விட்டேன்

System உடனடியாக தேவைபட்டது அதனால் தான்