Some snap apps doesn't show tamil fonts properly (showing box characters in some words)

உபுண்டு லினக்சில் சில snap செயலிகளில் தமிழ் எழுத்துருக்கள் சரியாகக் காண்பிக்கப்படுவதில்லை. (டிஸ்கார்டு, ஃபிரிடியூப்) போன்ற செயலிகளில் சில தமிழ் சொற்களுக்கு பெட்டிகள் போன்ற வடிவத்தையே காண்பிக்கிறது. இதனை எப்படி சரி செய்வது?
appimage அல்லது apt போன்றவற்றின் மூலம் நிறுவப்படும் செயலிகளில் தானாக மேம்படுத்திக்கொள்ளும் செயல்பாடு (auto-updates) இல்லை. அதனால் snap போன்றவற்றில் இருந்து செயலியை நிறுவ வேண்டியுள்ளது. அதில் இந்த சிக்கல் உள்ளது.

இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.

இந்த தலைப்பில் விவாதம் தெடரப்படாததால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நான் கூறிய சிக்கல் இன்னமும் தொடர்கின்றது. டிஸ்கார்டு, ஃபிரிடியூப் போன்ற சில Snap செயலிகளில் தமிழ் எழுத்துகள் முறையாகக் காண்பிக்கப்படுவதில்லை. இதை எப்படி சரி செய்வது என்றும் விளங்கவில்லை.

fc-list :lang=ta

இந்த கமாண்டை ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இயக்கி வரும் தகவலை பகிரவும்.


நீங்கள் குறிப்பிட்ட அந்த லினக்சு கட்டளையின் திரைப்பிடிப்பை கொடுத்துள்ளேன்.

fc-cache -frv

இந்த கமாண்டை இயக்கவும். மீண்டும் snap வழியாக இயங்கும் firefox ஐ இயக்கவும். சிக்கல் தீர்கின்றதா என்று கூறவும். அப்படி தீரவில்லை எனில் மீண்டும் snap வழியாக இயங்கும் firefox ஐ இயக்கிவிட்டு டெர்மினலில்

sudo nsenter -t $(pgrep firefox | head -1) -a /usr/bin/bash -c 'sudo su '$(id -un)
gnome=$(ls -1d /snap/gnome*/current)
FC_DEBUG=8 LD_LIBRARY_PATH="${gnome}"/usr/lib/$(uname -m)-linux-gnu "${gnome}"/usr/bin/fc-list :lang=ta 2>&1 | tee ~/Downloads/snap-fc-list.log
exit
curl --data-binary @"${HOME}"/Downloads/snap-fc-list.log https://paste.rs; echo

இந்த கமாண்டுகளை இயக்கவும். இவை ஒரு இணைய இணைப்பை வெளியிடும், அதை இங்கே பகிரவும்.

இந்த சிக்கில் தொடர்கின்றதா என்று கூறவும்.

இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் சிக்கல் தீர்க்கப்படவில்லை என்று முடிக்கிறோம்.