லினக்சு மிண்டுவில் இசுடார்ட்டு (start button) அமைப்பை மீண்டும் கொண்டு வருவது எப்படி?
ஏனெனில் ஒவ்வொரு முறையும் மடிக்கணியை அணைப்பதற்கு முனையம் சென்று $sudo shutdown now எனும் கட்டளை இடவேண்டியுள்ளதாய் இருக்கின்றது.
லினக்சு மிண்டுவில் இசுடார்ட்டு (start button) அமைப்பை மீண்டும் கொண்டு வருவது எப்படி?
திரையின் அடிப்பிகுதியில் பணிப்பட்டையில் (Panel) காலியாக இருக்கும் இடத்தில் சுட்டியை வைத்து வலது கிளிக் செய்யவும், வரும் மெனுவில் applets என்பதை தேர்வு செய்யவும். பின் வரும் மென்பொருளில் Main Cinnamon menu என்பதை தெர்வு செய்யதால் Start Menu வரும்.
தாங்கள் கூறியதுபோல் செய்யும்பொழுது applets என்பது வரவில்லை. பின்வரும் திரைப்பிடித்தியில் உள்ளது மட்டும் வருகின்றது.
திரையில் உள்ள குறுநிரல்கள் என்பதை தேர்வு செய்து வரும் திரையை பகிரவும்.
தாங்கள் கூறியதுபோல் குறுநிரல்கள் என்பதைத் தெரிவுசெய்து, அதன்பின்பு பட்டி என்பதைத் தெரிவுசெய்தவுடன் திரையில் அச்சிக்கல் தீர்ந்தது. வழிகாட்டலுக்கு @mohan43u நன்றி!