Stop autostart tray

வணக்கம்,
நான் i3-WM linuxmint பயன்படுத்துகிறேன்.

பல application tray autostart ஆகிறது
இதை எப்படி நிருத்துவது?

இதை தற்காலிகமாக சரி செய்ய i3 Config யில் இவ்வாறு செய்தேன் ஆனால் இது சரி என்று தோன்றவில்லை

#kill tray
exec --no-startup-id "sleep 15 && kill $(pgrep mintreport-tray) $(pgrep mintUpdate) $( pgrep blueman-applet)"

window manager பயன்படுத்துபவர்களுக்கு autostart capplication control செய்ய எவையனும் gui application உள்ளதா?

நன்றி :slight_smile:

application tray autostart

பல அப்ளிக்கேஷன் டிரே ஸ்டார்ட் ஆகின்றதா? அல்லது ஒரு அப்ளிகேஷன் டிரேவில் பல மென்பொருட்கள் ஆட்டோஸ்டார்ட் ஆகின்றனவா? திரையை பதிவெடுத்து இங்கே பகிரவும்.

பல அப்ளிக்கேஷன் டிரே ஸ்டார்ட் ஆகிறது.

  • diodon (clipboard-manager)
  • mintUpdate
  • mintreport-tray
  • safeeyes - தேவை படுகிறது.

இதை பற்றி இணையத்தில் தேடினேன் ask ubuntu-வில் பார்த்தேன் அதில்
/etc/xdg/autostart directory இல் உள்ள .desktop fileஐ பார்க்க சொன்னார்கள். நான் disable என்ற directory க்கு தள்ளினேன்.
இப்போது சிக்கல் நீங்கியது.
இந்த முறை சரியா?
உதவியத்துக்கு நன்றி :slight_smile:

இந்த முறை சரியா?

சரிதான்.

ஆணால் ஏன் உங்களுக்கு மிண்ட் ரிப்போர்ட்டும் மிண்ட் அப்டேட்டும் தேவைப்படாது என்று முடிவு எடுத்துள்ளீர்கள் என்று புரியவில்லை, இவை இரண்டும் உங்கள் கணினியை அப்-டு-டேட் வைக்க உதவும் அப்ளிக்கேஷன்கள். அவற்றை டிசேபில் செய்வதால் என்ன பயன் என்று புரியவில்லை.

எனினும் உங்களுக்கு சரி என்று தோன்றினால் அவற்றை டிசேபில் செய்தே வைக்கவும்.

சரியான நாட்கள் இடைவெளியில் நானே update செயித்துவிடுவேன். தானாக இயங்குவதில் விருப்பம் இல்லை . இதுவே காரணம்.