லினக்சு மிண்டின் தற்போதைய பதிப்பு நிறுவியுள்ளேன். ஏற்கனவே நிறுவிய லினக்சில் செயல்பட்டது. தற்போதைய பதிப்பில் ibus நிறுவினேன். அதில் TamilNet '99 நிறுவப்பட்டுள்ளது. இதன் தட்டச்சுமுறை பாமினி தட்டச்சு முறையை ஒட்டி உள்ளது. ஆகையால் தட்டச்சு செய்வதில் சுணக்கம் ஏற்படுகின்றது. வேறு ஏதேனும் மென்பொருள் நிறுவ வேண்டுமா? அறியத் தாருங்கள்
ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்
sudo apt install ibus-m17n
இந்த கமாண்டை இயக்கவும். இது ibus ல் m17n என்ற முறையில் வரையறை செய்யப்பட்டுள்ள உள்ளீடு முறைகளை கணினிக்குள் புகுத்தும். பின் லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி IBus Preferences என்ற மென்பொருளை இயக்கி அதில் Input Method டேபை கிளிக் செய்யவும். அதில் Add கிளிக் செய்து பின் மூன்று புள்ளிகள் கொண்ட நெட்டையான கோட்டை தேர்வு செய்து பின் tamil என்று தட்டச்சு செய்து வரும் Tamil என்பதை தேர்வு செய்யவும். இப்போது அதில் தமிழிற்கு உள்ள அனைத்து உள்ளீடு முறைகளும் காட்டும் அதில் tamil99 (m17n) என்பதை தேர்வு செய்யவும்.
பின் ஒரு டெக்ஸ்ட் எடிட்டரை தேர்வு செய்து Tamil99 முறையில் தட்டச்சு செய்து பார்க்கவும். சிக்கல் தொடர்ந்தால் கூறவும்.
1 Like

