மேற்கண்ட இணைப்பில் பாமினி எழுத்துருவில் உள்ள docx கோப்புகளை ஒருங்குறியில் மாற்றும் பைத்தான் நிரல் உள்ளது. இது மிகவும் பழைய நிரல் என்பதால் வேலை செய்யவில்லை. பைத்தான்3 க்கு மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். என்னிடம் உள்ள தமிழ் ஆய்வேடுகள் (CC-BY-SA-NC) அனைத்தும் பாமினி எழுத்துருவிலே உள்ளது. அதனை ஒருங்குறியில் மாற்ற இது உதவும் என நினைக்கிறேன். இணையத்தில் உள்ள பாமினி-யுனிகோட் மாற்றிகளைப் பயன்படுத்தலாம். ஆனால் அவைகள் plain text என்றால் நான்றாக வேலை செய்யும். என்னிடம் உள்ள கோப்புகளில் படங்கள், மேற்கோள்கள் இருப்பதால் அவற்றைப் பயன்படுத்துவதால் கோப்பின் வடிவம் முழுவதும் மாறிவிடுகின்றன. உதவுக…
இந்த இணைப்பில் ஒரு பாமினி docx கோப்பு உள்ளது.