Tamil Font Style

நான் கிம்ப் (GIMP) மற்றும் க்கிரிட்டா (KRITA) பயன்படுத்தும் போது தமிழ் வடிவங்கள் (STML Font Style) தர முடியவில்லை.அதன் தோற்றத்தில் கட்டங்கள் மட்டுமே காணப்படுகிறது.
லிப்ரே ஆபிஸ்-ல் கூட(LibreOffice) முடியவில்லை.
தமிழ் 99 keyboard தான் பயன்படுத்துகிறேன்.எந்தவித FONT STYLE-ம் இன்றி தமிழை பயன்படுத்த முடிகிறது.

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

curl -O 'https://www.tamilvu.org/tkbd/tau_fonts.zip'
unzip -d ~/.local/share/fonts/ tau_fonts.zip
rm tau_fonts.zip
mkdir -p ~/.config/fontconfig/conf.d
echo -e '<?xml version="1.0"?>\n<!DOCTYPE fontconfig SYSTEM "urn:fontconfig:fonts.dtd">\n<fontconfig>\n<match>\n<test name="lang" target="pattern"><string>ta</string></test>\n<edit name="postscriptname"><string>TAU-Barathi</string></edit>\n</match>\n</fontconfig>' >~/.config/fontconfig/conf.d/99-tamil-default-font.conf
fc-cache -rv

இந்த கமாண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக இயக்கவும். பின் Krita அல்லது Gimp துவக்கி சரியாக வருகின்றதா என்று பார்க்கவும்.

மிகவும் நன்றி…!
நீங்கள் தந்த வழிமுறை பயனளித்தது.இருப்பினும் ஒரு வேண்டுகோள்,(TAU) குடும்பங்கள் வேளை செய்கிறது.நான் (STMZH) செந்தமிழ் குடும்ப வடிவங்களைத் தான் அதிகம் பயன்படுத்துவேன்.அதற்கு ஏதேனும் வழி தாருங்கள்…!

நான் மேலே கொடுத்துள்ள பாண்ட்டுகள் தமிழ் விர்ச்சுவல் யூனிவர்சிட்டியினால் கட்டற்ற உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ள பாண்ட்டுகள். அதனால் இங்கே பகிர்ந்தேன். நீங்கள் கூறும் STMZH பாண்ட்டுகளை கட்டற்ற உரிமையில் பகிரப்படும் பாண்ட்டுகளா என்று எனக்கு தெரியவில்லை. அப்படி கட்டற்ற உரிமையில் இல்லை எனில் அவற்றை பற்றி இங்கே விவாதிங்க இயலாது.

அப்படி கட்டற்ற உரிமையில் வழங்கப்படுபவை என்றால் பதிவிரக்கம் செய்ய தேவையான இணைப்பை இங்கே பகிரவும். அவற்றை பதிவிரக்கம் செய்து லினக்சில் இயங்குமா அல்லது இயங்காதா என்று கூறலாம்.

மிகவும் நன்றி. LINU Commands சரியாக வேளை செய்து விட்டது…