செயற்கை நுண்ணறிவு மூலம் நூல்களை எழுதுவதும் மொழி பெயர்ப்பதும் எப்படி? - நிகழ்வு

வணக்கம்.

உலகின் புதிய தொழில்நுட்பப் புரட்சியான செயற்கை நுண்ணறிவுப் (AI) புரட்சி புத்தகப் பதிப்புத்துறையையு்ம விட்டுவைக்கவில்லை. அத்தொழில்நுட்பத்தின் பலன்களை நாம் எப்படி பெறுவது என்பதை விளக்கும் ஒரு நிகழ்வுக்கு உங்களை அன்போடு அழைக்கிறோம்.

எங்கள் ஐலேசா நிறுவனத்தின் (Ailaysa.com) தானியங்கு மொழிபெயர்ப்பு தளம் குறித்து நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறோம். AI தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தானியக்கமாக நூல்களை எழுதவும், மொழிபெயர்க்கவும் அது உங்களுக்கு உதவுகிறது. எழுத்து வடிவத்திலிருந்து ஒலி வடிவ நூல்களை உருவாக்கவும் தானியக்கமாக படங்களை வரையவும்கூட அது உதவுகிறது.

இது குறித்து நேரடி விளக்கக்காட்சி (Demo)யுடன் கூடிய அறிமுக நிகழ்ச்சிக்கு தங்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் செலவையும் நேரத்தையும் மிச்சப்படுத்தி மொழிபெயர்ப்பு புத்தகங்களை விரைவாக வெளியிட உதவும் உத்திகளை இந்த நிகழ்ச்சியில் நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.

வழக்கமான செலவைவிட மிகக்குறைவான செலவில் நாம் நூல்களை மொழிபெயர்த்துக்கொள்ளலாம் என்பது இனிய தகவல்!

பதிப்பாளரும் சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியின் ஆலோசகரும் எழுத்தாளரும், Ailaysa நிறுவனத்தின் நிறுவனருமான திரு. ஆழி செந்தில்நாதன் உரையாற்றுவார். ஐலேசா நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் விளக்கம் அளிப்பார்கள். உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள்.

இது முழுக்க முழுக்க தமிழ்ப் பதி்ப்புலகைச் சார்ந்தவர்களுக்கான நிகழ்வு ஆகும், நிகழ்வு விவரம் கீழே அளிக்கப்பட்டுள்ளது. தரப்பட்டுள்ள தொடர்பு எண்ணுக்கு தொலைபேசி செய்து உங்கள் வருகையை முன்பதிவு செய்துகொள்ளுங்கள். நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு முக்கியமானதாகும். நிகழ்வைத் தொடர்ந்து நண்பகல் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம். பிரபஞ்சன் அரங்கம் , டிஸ்கவரி புக் பேலஸ்,

1055 B, முனுசாமி சாலை,

கலைஞர் கருணாநிதி நகர் மேற்கு, சென்னை

நாள், நேரம்: 08.04.2023 சனிக்கிழமை காலை 11 முதல் மதியம் 1.30 வரை

முன்பதிவுக்கு: மருதுபாண்டியன், 9865281907

வருவதற்கு முன், www.ailaysa.com சென்று பார்வையிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

ஐலேசா குழு

ailaysa.com