muthu
July 30, 2023, 2:55am
1
அண்மைக்காலமாக லினக்ஸ் மின்டில் சாப்ட்வேர் மேனேஜரில் ஒரு மென்பொருளைத் தேடினால் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. கணினியில் லினக்ஸ் மின்ட் கடைசிப் பதிப்பைப் பயன்படுத்துகிறேன். எல்லாவற்றையும் இற்றைப்படுத்தியும் (update) வைத்திருக்கிறேன்.
அதே போல, வைபை வசதியை ஒரு இணையத்தில் இருந்து இன்னொன்றிற்கு மாற்றுவதற்கும் அதிக நேரம் ஆகிறது.
இவற்றைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும்.
#wifi #linux #mint #software_manager
ctrl-alt-t
கொடுத்து வரும் டெர்மினலில்
find /etc/apt/sources.list* -type f -exec grep -Hv '^#' {} \;
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
muthu
July 31, 2023, 5:10am
3
/etc/apt/sources.list:
/etc/apt/sources.list.d/official-package-repositories.list:deb http://packages.linuxmint.com victoria main upstream import backport #id:linuxmint_main
/etc/apt/sources.list.d/official-package-repositories.list:
/etc/apt/sources.list.d/official-package-repositories.list:deb http://archive.ubuntu.com/ubuntu jammy main restricted universe multiverse
/etc/apt/sources.list.d/official-package-repositories.list:deb http://archive.ubuntu.com/ubuntu jammy-updates main restricted universe multiverse
/etc/apt/sources.list.d/official-package-repositories.list:deb http://archive.ubuntu.com/ubuntu jammy-backports main restricted universe multiverse
/etc/apt/sources.list.d/official-package-repositories.list:
/etc/apt/sources.list.d/official-package-repositories.list:deb http://security.ubuntu.com/ubuntu/ jammy-security main restricted universe multiverse
flatpak remotes --show-details
இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.
muthu
July 31, 2023, 1:45pm
5
Name Title URL Collection ID Subset Filter Priority Options … … Homepage Icon
flathub Flathub https://dl.flathub.org/repo/ - - - 1 system … … https://flathub.org/ https://dl.flathub.org/repo/logo.svg
mv ~/.cache/mintinstall ~/.cache/mintinstall.disabled
mintinstall
இந்த இரண்டு கமாண்டுகளையும் இயக்கவும். இப்போது எந்த வேகத்தில் Software Manager
வருகின்றது என்று கூறவும். மீண்டும பழையபடியே நிதானமாக இருந்தால் டெர்மினலில் வரும் தகவலை பகிரவும்.
muthu
July 31, 2023, 2:12pm
7
மிக்க நன்றி! இப்போது Software Manager வேகமாக இயங்குகிறது. நீங்கள் தந்த கட்டளைகளைச் சுருக்கமாக என்ன கோணத்தில் இந்தச் சிக்கலைத் தீர்க்க அணுகியிருக்கிறீர்கள் என்றும் சுருக்கமாக விளக்கினால் லினக்ஸ் அறிவை வளர்த்துக் கொள்ள உதவும். முடிந்தால் மட்டுமே!
சாப்ட்வேர் மேனேஜரில் சிக்கல் வர பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன, முதல் காரணம் இயங்குதளம் ரெப்பாசிட்டரிகள் சரியாக கட்டமைக்கப்படாமல் (configure) இருக்கலாம். அதைத்தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ள கமாண்டின் வெளியீட்டை பார்த்து தெளிவாக்கி கொண்டேன் , அடுத்தாக flatpak
சரியாக கட்டமைக்கப்படவில்லை எனில் சிக்கல் வரலாம், அதை இங்கே கொடுக்கப்பட்ட கமாண்டின் வெளியீட்டை பார்த்து தெளிவாக்கி கொண்டேன் , இரண்டு இடங்களிலும் சிக்கல் இல்லை என்று தெரிந்தபின் மீதம் இருப்பது cache
வில் மட்டுமே, அதை ஓரம்கட்டிவிட்டால் மீண்டும் சாப்ட்வேர் மேனேஜர் இயக்கும்போது தானாக புதிய cache
உருவாக்கப்பட்டுவிடும். அதைத்தான் இங்கே செய்தீர்கள் .
இப்போது அந்த பழைய cache
நமக்கு தேவையில்லை. எனவே அதை இந்த கமாண்டை இயக்கி அழித்துவிடவும்
rm -fr ~/.cache/mintinstall.disabled
3 Likes