புத்தகம் மின்னாக்கம் செய்தல்

அன்புடையீர், எனது உறவினர் திரு அ.மா சகதீசன் தமது 27 நூல்களை மின்னாக்கம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்தார். அது பற்றி தங்களை ஒரு வருடத்திற்கு முன்பு அனுகினேன். தங்களின் பரிந்துரைப்படி திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வேலை செய்யும் திரு அன்வர் என்பவரிடம் இப்பணியினை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டு அவரை அனுகி அவர் கொடுத்த உறுதிமொழிக்கேற்ப புத்தகங்கள் ஒப்படைக்கப்பட்டது. அதில் கலீல் ஜிப்ரானின் கவிதைகள் ஒரு புத்தகம் மட்டுமே உடனடியாக மின்னாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. மற்ற புத்தகங்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை. அவரை தொடர்ந்து தொடர்பு கொண்டு அவ்வப்போது கேட்கும்போதெல்லாம் விரைவில் முடித்துக் கொடுக்கிறென் என்று மட்டும் தெரிவிக்கின்றார்.இதற்கு ஆகும் பொருட்செலவினையும் கொடுத்து விடுவதாக எனது உறவினர் வாக்குறுதி கொடுத்துள்ளார்.இந்த புத்தகம் அல்லாது மேலும் அவரது எழுத்தாளர்கள் நண்பர்களின் புத்தகங்களையும் மின்னாக்கம் செய்யும் பொருட்டு அவருக்கே அனுப்பியுள்ளார். எனது உறவினருக்கு 97 வயதாகிறது. அவரது இறுதி ஆசையாக இந்த புத்தகங்களை மின்னாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்பது. இதற்கு இக்குழு முயற்சி மேற்கொண்டு உதவிட வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சங்கரானந்தம் 9994848824 சென்னை.

1 Like

மின்னூலாக்கம் குறித்து ஆய்ந்து விட்டு இங்கே எழுதுவேன்.

மிக்க நன்றி.