லினக்சில் கணினியின் வேகத்தைக் கூட்டுவது எப்படி?

ls /sys/bus/usb/devices/usb1

இதை கொடுக்கவும். வரும் திரையை பகிரவும்.

கமாண்ட் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

image

ls /sys/bus/usb/devices/usb1/1-0\:1.0/usb1-port6; cat /sys/bus/usb/devices/usb1/1-0\:1.0/usb1-port6/connect_type

முன்பு கொடுத்த கமாண்டில் தவறு செய்துள்ளோம் 1-0\:1.0 க்கு பதிலாக 1.0\:1.0 என்று கொடுத்திருந்தோம். இங்கே கொடுக்கப்பட கமாண்டில் அதை சரி செய்துள்ளேன். இயக்கி வரும் தகவலை பகிரவும்.

தோழர், usb1-port6 ல் ஒரு இண்டர்னல் டிவைஸ் கணைக்ட் செய்யப்பட்டுள்ளது அதனால்தான் “hardwired” என்று வருகின்றது. அந்த டிவைசில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

என் சந்தேகம் இந்த இண்டர்னல் டிவைஸ் லேப்டாப் கேமராவாக இருக்க வாய்ப்பு உள்ளது. தங்கள் கேமரா சரியாக இயங்குகின்றதா? பிசிகல் லேட்ச் உள்ளதா? அது முடப்பட்டுள்ளதா அல்லது திரக்கப்பட்டு உள்ளதா?

ஆமாம், லேப்டாப் கேமரா சரியாக இயங்கவில்லை. அது மூடப்பட்டு உள்ளது.

அதை திரந்த நிலையில் வைத்து ரீபூட் செய்யவும். பிறகு சரியாக வேலை செய்கின்றதா என்று சோதித்து பார்க்கவும்.

வேலை செய்யவில்லை.

சரி, தங்கள் கணினியை ஷட்டவுன் செய்யவும். பிறகு மீண்டும் பூட் செய்யவும். தற்போது பூட் ஆகும்போது Esc அழுத்திக்கொண்டே இருந்தால் grub மெனு வரும். அதில் லேட்டஸ்ட் கர்ணல் தேர்வு செய்யாமல் 5.4.x கர்ணல் வரி இருந்தால் அதை தேர்வு செய்து பூட் செய்யவும்.

5.4.x கர்ணலில் தங்களுக்கு வரும் சிக்கல் இருக்கின்றதா என்று பார்க்கவும்.

இந்த தலைப்பில் எந்த ஒரு தீர்வும் இல்லாத்தால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.