லினக்சில் கணினியின் வேகத்தைக் கூட்டுவது எப்படி?

சில நேரங்களில் கணினி தொடங்குவதற்கு, அணைவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. இதை எப்படிச் சரி செய்வது?

தேவையில்லாத சர்வீஸ்களை இயக்காமல் தடுப்பது வேகத்தையும் ரிசோர்ஸ்களையும் மிச்சப்படுத்தும்.

systemd-analyze blame | curl -F 'f:1=<-' ix.io

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைப்பை பகிரவும், இதில் முதலாவதாக வரும் சர்வீஸ்கள் மிகவும் நேரம் எடுத்துக்கொள்கின்றன என்று பொருள். அவற்றை நிருத்தினால் வேகம் கூடுதலாகலாம்.

http://ix.io/40Ms

53.501s upower.service அதிக நேரத்தை எடுக்கிறதாகத் தெரிகிறது.

systemd-analyze critical-chain upower.service | curl -F 'f:1=<-' ix.io

இதை கொடுத்து வரும் இணைப்பை பகிரவும். இணையத்தில் தேடியதில் கணினியில் USB வழியாக ஏதேனும் இனைக்கப்பட்டு இருந்தால் upowerd அந்த டிவைசின் பவர் தன்மையை கணிக்க நேரம் எடுத்துக்கொள்ளும் என்று குறிப்பிட்டு இருந்தனர். தாங்கள் ஏதேனும் அப்படி இனைத்து இருந்தால் அந்த இனைப்பை எடுத்துவிட்டு பூட் செய்து பார்க்கவும்.

http://ix.io/40Rh

USB வழியே கணினியில் எதுவும் இணைக்கப்படவில்லை. ஆனால் கணினியைத் தொடக்கும் போது,


இப்படிச் செய்தி ஒரு நிமிட அளவில் ஓடுகிறது.

lsusb -tv

இதை கொடுத்து வரும் திரையை பகிருங்கள்.

/: Bus 02.Port 1: Dev 1, Class=root_hub, Driver=xhci_hcd/6p, 10000M
ID 1d6b:0003 Linux Foundation 3.0 root hub
/: Bus 01.Port 1: Dev 1, Class=root_hub, Driver=xhci_hcd/12p, 480M
ID 1d6b:0002 Linux Foundation 2.0 root hub
|__ Port 10: Dev 6, If 0, Class=Wireless, Driver=btusb, 12M
ID 0cf3:e500 Qualcomm Atheros Communications
|__ Port 10: Dev 6, If 1, Class=Wireless, Driver=btusb, 12M
ID 0cf3:e500 Qualcomm Atheros Communications

lsusb -v -d 0cf3:e500 | curl -F 'f:1=<-' ix.io

இந்த கமாண்டை கொடுத்து வரும் இணைப்பை பகிரவும்.

தோழர், மேலும் தங்கள் சிஸ்டத்தை லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டன் அழுத்தி update manager கொடுத்து வரும் மென்பொருள் பயன்படுத்தி அப்டேட் செய்யவும், மேலும் அதே மென்பொருளில் view மெனு தேர்வு செய்து Linux Kernels தேர்வு செய்து லேட்டஸ்ட் கர்னலை இன்ஸ்டால் செய்யவும்.

இதன்பின் சிக்கல் வருகின்றதா என்று பார்க்கவும்.

http://ix.io/40S6

ஏற்கெனவே அண்மைய லினக்ஸ் கர்னல் [5.15.0-33] தான் இயங்குநிலையில் இருக்கிறது. இயங்கு[ஆக்டிவ்] நிலையில் இல்லாத பிற கர்னல்களை நீக்கி விடலாமா?

uname -r

இதை கொடுத்தால் தற்போது இயங்கும் கர்னலின் பதிப்பை காட்டும். அது 5.15.0-33 என்று உள்ளதா என்று உறுதி படுத்திக்கொள்ளவும். பிறகு இந்த கமாண்டை இயக்கவும்.

sudo journalctl -b | curl -F 'f:1=<-' ix.io

வரும் இனைப்பை பகிரவும்.

இரு முறை முயன்றேன். முதல் முறை, no results to fetch என்றும் இரண்டாம் முறை curl: (52) Empty reply from server
என்றும் வந்தது.

sudo journalctl -b | curl --data-binary @- https://paste.rs

தங்கள் கணினியை ரீபூட் செய்துவிட்டு இந்த கமாண்டை முயற்சித்து பார்க்கவும்.

https://paste.rs/mdh

தோழர், usb1 பஸ்சில் port6 ல் ஏதோ சிக்கல் இருக்கின்றது. அது மென்பொருள் சிக்கலா இல்லை வன்பொருள் சிக்கலா என்று தெரியவில்லை. கர்னல் அந்த யூஎஸ்பி போர்டில் ஏதோ கணைக்ட் செய்யப்பட்டுள்ளது என்று கருதி அதை பயன்படுத்த முற்படுகின்றது. அந்த போர்ட்டில் ஏதேனும் இனைக்கப்பட்டிருந்தால் அந்த யூஎஸ்பி டிவைஸ் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறலாம். ஆனால் தாங்கள் முன்பு கொடுத்த விவரங்களை பார்க்கும் போது எந்த ஒரு டிவைசும் port6 ல் இனைந்துள்ளதாக தெரியவில்லை. இது போன்ற நிலை பழுதடைந்த usb போர்டால் வர வாய்புகள் உள்ளன.

ls /sys/bus/usb/devices/usb1

கொடுத்து வரும் தகவலை பகிரவும்.

1-0:1.0 authorized_default bConfigurationValue bDeviceSubClass bMaxPower busnum dev driver idProduct ltm_capable power removable serial tx_lanes version
1-10 avoid_reset_quirk bDeviceClass bmAttributes bNumConfigurations configuration devnum ep_00 idVendor manufacturer product remove speed uevent
authorized bcdDevice bDeviceProtocol bMaxPacketSize0 bNumInterfaces descriptors devpath firmware_node interface_authorized_default maxchild quirks rx_lanes subsystem urbnum

image

ls /sys/bus/usb/devices/usb1/1.0\:1.0/usb1-port6; cat /sys/bus/usb/devices/usb1/1.0\:1.0/usb1-port6/connect_type

இதை கொடுக்கவும். வரும் திரையை பகிரவும்.