எனது லினக்ஸில் சவுண்ட் சேஞ்ச் பண்ணனும் சேஞ்சு ஆகல பிரைட்னஸ் சேஞ்ச் பண்ண முடியல என்ன பண்றது?

echo "2441" | sudo tee /sys/class/backlight/intel_backlight/brightness

இதை கொடுக்கவும். கொடுத்தால் தங்கள் திரையின் வெளிச்சம் பாதியாக குரைகின்றதா என்று பார்க்கவும்.

நான் கமெண்ட்ஸ் கரெக்ட்டா தான் ஜி இருக்கு சேஞ்சஸ் எதுவும் இல்ல இப்ப வேற என்ன பண்ணலாம்

echo "10" | sudo tee /sys/class/backlight/intel_backlight/brightness; sleep 3; echo "2441" | sudo tee /sys/class/backlight/intel_backlight/brightness

இதை கொடுக்கவும். திரை 3 நொடிக்கு கருமையாகி பின்பு மீண்டு வருகின்றதா என்று கூறவும்.

சேஞ்சஸ் எதுவும் இல்லை சவுண்டு கேக்கல இதுல

நாம் ஒலி சிக்களை இங்கே தீர்கவில்லை. திரையின் வெளிச்சம் சிக்கலை தீர்த்து கொண்டுள்ளோம். திரை வெளிச்சம் குரைகின்றதா? அல்லது அதிகபட்ச வெளிச்சம்தான் உள்ளதா?

அதிகபட்ச வெளிச்சமாகத்தான் உள்ளது திரையில்.

sudo xed /etc/default/grub

இதை கொடுத்து வரும் எடிட்டரில் GRUB_CMDLINE_LINUX_DEFAULT=“quiet splash” என்பதற்கு பதிலாக GRUB_CMDLINE_LINUX_DEFAULT=“quiet splash acpi_backlight=vendor” என்று வருமாறு மாற்றவும். பின் File மெனு தேர்வு செய்து Save கொடுக்கவும். மீண்டும் File தேர்வு செய்து Quit கொடுக்கவும்.

பின் இந்த கமாண்டை டெர்மினலில் இயக்கவும்

sudo update-grub

முடிந்தபின் ரீபூட் செய்யவும். பிறகு லாகின் செய்து இந்த கமாண்டை இயக்கவும்.

ls /sys/class/backlight

வரும் திரையை பகிரவும்.

தோழர், கமாண்டை சரியாக பார்க்கவும். update-grub கொடுக்கவும். update_grub அல்ல.

ரீபூட் செய்த பிறகு இறுதி கமாண்டை இயக்கவும்

அப்படியே செய்கிறேன்

cat /proc/cmdline

இதை கொடுக்கவும். வரும் திரையை பகிரவும்.

echo "1000" | sudo tee /sys/class/backlight/intel_backlight/brightness

இந்த கமாண்டை கொடுக்கவும். திரை வெளிச்சம் குரைகின்றதா என்று பார்க்கவும்.

திரையின் வெளிச்சம் குறையவில்லை ஆனால் செட்டிங் சேஞ்ச் ஆயிருக்கு.

echo "0" | sudo tee /sys/class/backlight/intel_backlight/brightness

இதை கொடுத்தால் முற்றிலும் இருள் வருகின்றதா என்று பார்க்கவும். திரை முழுவதுமாக தெரியவில்லை எனில் பவர் பட்டனை அழுத்தி ரீபூட் செய்யவும்.