கணியம் அறக்கட்டளை - 2025 இலக்குகள், செய்யக்கூடிய செயல்கள், நிகழ்வுகள் பற்றி இங்கே உரையாடலாம்.
உங்கள் கருத்துகளை இங்கே பகிர வேண்டுகிறேன்.
கணியம் அறக்கட்டளை - 2025 இலக்குகள், செய்யக்கூடிய செயல்கள், நிகழ்வுகள் பற்றி இங்கே உரையாடலாம்.
உங்கள் கருத்துகளை இங்கே பகிர வேண்டுகிறேன்.
கட்டற்ற மென்பொருள் குழுக்கள் Ilugc, KanchiLug போன்றவற்றின் நெடு நாள் கனவு தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கட்டற்ற மென்பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே, அதை நடைமுறை படுத்துதலில் இருக்கும் சிக்கல்களை கண்டறிந்து அவற்றை நீக்கி கட்டற்ற மெண்பொருள் அவர்களுக்கு போய் சேர வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
ஏற்கனவே Ilugc, KanchiLug மூலம் விழிப்புணர்வு செய்துள்ளோமெனில் எவ்வாறு நாம் செய்துள்ளோம்.
பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள் எதேனும் இருப்பின் அதன் அனுபவங்களை பகிர்க.
என்னுடைய தனிப்பட்ட கருத்து:
பள்ளி மாணவர்களுக்கு இவ்வகையான கட்டற்ற மென்பொருட்கள் பயன்பாட்டின் தேவைகள் என்ன என்று தெரிந்து கொண்டு அதனை அளித்தால் நன்றாக சென்றடையும்.
உதாரணமாக,
தமிழ் பாடத்தில் இருக்கும் புணர்ச்சிவிதிகளை நிரல் மூலம் நாம் எழுதியுள்ளோம் அதனுடைய கருத்தரங்கு நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்து அதில் அந்த நிரல்களை நாம் இயக்கி காட்டினால் அது ஒருபெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும்.
இந்த கருத்தரங்கு நிகழ்வை அமைப்பதில் உள்ள சிக்கல்கள் பள்ளி நாட்களில் அமைந்தால் அதிக மாணவர்களை சென்றடையும் ஆனால் பள்ளி நாட்களில் ஆசிரியர்கள் அனுமதி அளிப்பது சிரமம்.
வார இறுதி நாட்களில் மாணவர்கள் வரத் தயங்குவார்கள்.
முதற்கட்டமாக பள்ளி ஆசிரியர்களை அனுகி அவர்கள் மாணவர்களுக்கு வீட்டுப்படங்களை அளிக்க தற்போது பயன்படுத்தும் வாட்சாப் குழுக்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் யூடூப் நிகழ்படங்களாக ஒரு சிறு துளியை அனுப்பி ஆர்வத்தினை ஏற்படுத்தலாம்.