பில்லிங் சாஃப்ட்வேர் தயாரிக்க வேண்டும்

சிறிய அளவில் வர்த்தகம் செய்யும் வகையிலான ஒரு பில்லிங் சாஃப்ட்வேர் உருவாக்க வேண்டும். முழுக்க முழுக்க server உதவி இல்லாமல், கணினியிலேயே தரவுகள் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும். மொத்தமாக 10 ஆப்ஷன்களில் வரவு செலவு கணக்குகளை பார்ப்பதுதான் திட்டம். மேலும், சம்பிட் கொடுத்தவுடன் வரவு செலவு அறிக்கையை பிரின்ட் செய்து எடுப்பதற்கான ஆப்ஷன் இருக்க வேண்டும். சிக்கல் என்னவென்றால் தற்போது பயன்படுத்தப்படும் கணினிகள் அனைத்தும் விண்டோஸ் மூலமே இயங்குகிறது. நான் chatgpt போன்ற செயற்கை நுண்ணறிவிடம் கேட்கும்போது, python,tkinter,sql lite மூன்றும் போதுமானது என சொன்னது. சின்னதாக லாகின் செய்வதற்கு ஒரு ஆப்ஷன் இருக்க வேண்டும். இதை என்னால் செய்ய முடியுமா என்பதிலேயே கொஞ்சம் குழப்பம் இருக்கிறது. யாராவது கொஞ்சம் தெளிவாக ஐடியா கொடுத்தால் நன்றாக இருக்கும். முதற்கட்டமாக ஒரு கணினியில் பதிவேற்றம் செய்து பிறகு பிற கணினிகளுக்கும் பதிவேற்றம் செய்யலாம். அல்லது orange hrm(Just for example purpose) போன்ற ஏற்கனவே பில்லிங் தொழில்நுட்பத்திற்காக தயாரிக்கப்பட்ட பிரேம் ஒர்க்குகளை (frame work) பயன்படுத்தலாமா? உங்கள் மேலான வழிகாட்டுதலை எதிர்நோக்குகிறேன்.
இவ்விதம்,
ஸ்ரீ காளீஸ்வரர் செ
கட்டற்ற தொழில்நுட்ப ஆர்வலர்

நான் chatgpt போன்ற செயற்கை நுண்ணறிவிடம் கேட்கும்போது, python,tkinter,sql lite மூன்றும் போதுமானது என சொன்னது

முதலில் எளிமையான ஒரு செயலை செய்து பாருங்கள்

  • பைத்தானை பயன்படுத்தி ஒரு அட்டவனையை (table) sqlite டேட்டாபேசில் உள்ளீடு செய்யுங்கள்
என் பொருள் இருப்பு
1 அரிசி 40
2 துவரம் பருப்பு 20
  • பின் sqlite ல் ஊள்ளீடு செய்த அட்டவனையை டெர்மினலில் பிரிண்ட் செய்து பாருங்கள். உள்ளீடு செய்த தகவல்கள் சரியாக வெளியீடு செய்தால் உங்கள் முதல் படி வெற்றி
  • பின் இன்னொரு அட்டவனையில் ஒரு வாடிக்கையாளர் வந்தால் அவர் வாங்கும் பொருட்களை உள்ளீடு செய்ய ஒரு அட்டவனை உருவாக்குக. அதை sqlite ல் உள்ளீடு மற்றும் வெளியீடு செய்து பார்க்கவும்.
  • இவை இரண்டும் தெரிந்துவிட்டால் பின் இந்த இந்த இரண்டு அட்டவனைகளில் உள்ள தகவல்களை ஒன்று சேர்த்து எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்க (எ.க: வாடிக்கையாளர் பொருளை வாங்கி சென்ற பிறகு முதல் அட்டவனையில் இருப்பு குறைய வேண்டும்)

இப்படி sqlite என்ற ஒரு டேட்டாபேசை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படை தெரிந்துவிட்டால் நீங்கள் எதிர்பார்க்கும் மென்பொருள் எளிமையாக உருவாக்கி விடலாம்.

படிப்படியாக முயற்சித்து பார்க்கவும்.

உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இதே தேவை உலகில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். எளிமையாக வேண்டுமென்றால் கட்டற்ற மென்பொருளாக உங்கள் தேவைக்கு ஏற்ற மென்பொருள் முன்பே உருவாக்கி வைத்திருந்தால் அதை படித்து அந்த மென்பொருளில் மாற்றம் செய்து கூட நீங்கள் பயன்படுத்திகொள்ளலாம்.

1 Like

விண்டோஸ் என்றால் PockeBase என்ற ஒரு இலவச Backendless framework உள்ளது. முயற்சி செய்து பார்க்கவும். forntend எதில் வேண்டுமாலும் எழுதலாம். தங்களுக்கு சப்போர்ட் வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளவும். கோகுலேஷ் : r.gokulesh@gmail.com

இத்தளம் லினக்ஸ் சார்ந்த தகவல்களை பரிமாற உருவாக்கப்பட்ட தளம் ஆகும், இதில் மற்ற இயங்குதளத்தை பற்றி விவாதிங்க வேண்டாம்.

விண்டோஸ் உபயோகம் செய்யும் பயனாளிக்கு அதற்கான open source கேள்வி என்பதனால் சொல்லவேண்டியது ஆகியது. உங்களுக்கு அல்லது இதன் அட்மின் மற்ற os கேள்வி வேண்டாம் என்றால் நீங்கள் கேட்பவரிடம் முறையிடுவது சரி என்று படுகிறது. வணக்கம்.