தற்போது வேகமாக மாறிவரும் தொழில்நுட்பவியல் உலகில் ஆங்கிலமானது புதிய சொற்களை தத்தெடுத்துக்கொள்கிறது. உதாரணமாக லத்தீன் மொழியிலிருந்து percipio" என்ற சொல்லிலிருந்து “Percept”("புரிந்துகொள்வது/அறிந்துகொள்வது) போன்ற கருத்தை எடுத்து “perceptron” எனும் செய்யறிவிற்கான சொல்லை உள்வாங்கிக்கொண்டுள்ளது. ஆனால் தமிழில் “perceptron”, “deepfake” போன்ற சொற்களுக்கு நேரடி தமிழ் சொற்கள் கிடைக்கவில்லை.
-
அதேபோல ஒரு சொல்லுக்கு ஒவ்வொருவர் பார்வையில் விளக்கங்களை முன்வைக்கின்றனர் உதாரணமாக “AI” என்ற சொல்லுக்கு செயற்கை நுண்ணறிவு, செய்யறிவு, ஏஐ எனவும் கூறுகின்றனர்.
-
செய்யறிவு மூலம் பெறப்படும் தகவல்கள் நேரடி ஆங்கில சொல்லை அவ்வாறே எழுதி தருகின்றது (பெர்செப்ட்ரான்)
-
மேலும் “Facebook”, “Whatsapp” போன்ற நிறுவனங்களுக்கு சிலர்/பலர் பேஸ்புக், வாட்ஸ்அப் என அப்படியே ஏற்றுக்கொண்டாலும் சிலர்/பலர் முகநூல், புலனம் என தமிழாக்கம் செய்து பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறான சந்தர்பங்களில் ஒரு ஆவணத்தை வாசிக்கும்போது அல்லது பயன்படுத்தும்போது சிக்கல்கள் தோன்றுகின்றது.
இதனை நிவர்த்திக்கும்விதமாக விக்கிபீடியா போன்ற திறந்தவெளி இணையதளம் ஒன்று இருக்கும்பட்சத்தில் அல்லது தமிழ் விக்சனரியில் இற்றைபடுத்தும்போது ஒரு சிறந்த கலைச்சொல் அகராதி ஒன்று கிடைக்கப்பெறும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாக உள்ளது. தங்களின் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன். நன்றி