புதிய தலைப்பை உருவாக்குவது எப்படி

https://forums.tamillinuxcommunity.org செல்லவும், பின் மேல் வலது மூலையில் “+ New Topic” எனும் பொத்தானை அழுத்தவும். பின் வரும் சட்டத்தில் ‘Type title, or paste a link here’ எனும் இடத்தில் தாங்கள் கேட்க/சொல்ல நினைக்கும் தகவலுக்கு பொருந்துவது போல் ஒரு தலைப்பை கொடுக்கவும். பின் ‘Uncategorized’ என்பதை மாற்றி சரியான கேட்டகிரியை தேர்வு செய்யவும், பின் ‘Type here, Use Markdown, BBCode…’ என்று வரும் இடத்தில் தகவலை பதிவிடவும். முடிந்தபின் கீழே “Create Topic” எனும் நீல நிர பொத்தானை அழுத்தவும்.