The Tamil Journal-தமிழ் இதழ் Canada Tamil News-Tamil சுகுமார்
இவரையும்
இணைந்து நடத்தும் குழுவில் இணையுங்கள்.
.
திறவூற்றுக் கல்வி வளங்களும், கல்வித் தொழில்நுட்பங்களையும் தமிழுக்கென உருவாக்குவதில் முனைப்பு
இன்று மாலை 6 மணிக்கு, மாநாட்டு திட்டமிடல் சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த இணைப்பில் அனைவரையும் இணைய வேண்டுகிறேன்.
மாநாடு இடம் குறித்து முன்னேற்றங்கள் இல்லை.
பேச்சாளர்கள், தலைப்பு, சிற்றரங்குகள் பற்றி இன்று உரையாடலாம்.
திட்டமிடல் - இரண்டாவது சந்திப்பு
21 ஆகஸ்டு 2022 மாலை 6 மணி
கலந்து கொண்டோர்
மோகன்
சரவண பவானந்தன்
தனசேகர்
சீனிவாசன்
அபிராமி
பரமேஸ்வர்
பேச்சாளர்கள்
நித்யா
கலாராணி
அபிராமி
சுகந்தி
சிற்றரங்குகள்
20 பேர்
- LibreOffice
- Firefox
- Games
- Gimp
- Inkscape
- 3d / blender
- Deskop environments - Gnome/KDE/
- Free Software Philosophy
- Wikipedia
- FreeTamilEbooks
- Creative Commons License
- Docker
- Kubernetes
- Linux Network Servers
- Python
- Emacs
- Flatpak
- Programming
- Golang/Rust
- Voice Mozilla project
- Tesseract OCR
- Arduino
- Raspberri Pi
இடம்
இலோயாலா
நேரலைக்கு வாய்ப்பு உள்ளதா?
அண்ணா நூலகம்.
payment gateway
gpay
razorpay - 2 %
payumoney - 2 %
மோகன், அபிராமி
முன்பதிவுப் படிவம்
Oh My Form
Next Cloud Form
வலைத்தளம்
4 Best Hugo Event Conference Themes For 2022 -
இதில் இருந்து ஒரு தளத்தை அபிராமி, தனசேகர் வடிவமைப்பர்
வலைத்தளப் பெயர்கள்
பின்வரும் பெயர்களில் ஒன்றை வலைத்தளத்திற்கு தெரிவு செய்யலாம்.
TossConf.TamilLinuxCommunity.org
tossconf.in
பணிகள்
- TODO சிற்றரங்கு - அழைப்பு - பரமேஸ்வர்
- TODO கட்டணம், முன்பதிவு படிவம் - மோகன்
- TODO வலைத்தளம் - அபிராமி, தனசேகர்
- TODO வலைத்தளம் பதிவு - சீனிவாசன், மோகன்
நாளை, ஞாயிறு மாலை 6 மணிக்கு, மாநாட்டு திட்டமிடல் சந்திப்பு நடைபெறுகிறது.
Jitsi Meet
இந்த இணைப்பில் அனைவரையும் இணைய வேண்டுகிறேன்.
மாநாடு இடம் குறித்து முன்னேற்றங்கள் இல்லை. அடுத்த வார வெள்ளிக்குள் இடம் முடிவு செய்து விடலாம்.
வலைத்தளம், கட்டணம், பேச்சாளர்கள், தலைப்பு, சிற்றரங்குகள் பற்றி இன்று உரையாடலாம்.
மூன்றாம் சந்திப்பு - குறிப்புகள்
கலந்து கொண்டோர்
தனசேகர்
மோகன்
முத்து
துரை மணிகண்டன்
சரவண பவானந்தன்
இடம்
இலயோலா கல்லூரி பற்றி இந்த வாரத்தில் தெரியும்
வலைத்தளம்
தனசேகர் உருவாக்கி வரும் வலைத்தளம் காட்டினார்.
தேவையான மாற்றங்களை விரைவில் செயல் படுத்துவார்
இலச்சினை
லெனின் சில இலச்சினைகளை அனுப்பியுள்ளார். ஒன்றை தெரிவு செய்ய வேண்டும்
சிற்றரங்குகள்
பரமேஷ், முத்து இருவரும் இணைந்து சிற்றரங்குகளை திட்டமிடுவர்,
நன்கொடை
முன்பதிவு, நன்கொடைக்கான படிவம் RazorPay ல் மோகன் வடிவமைக்கிறார்.
சீனிவாசன், அதின் கணியம் அறக்கட்டளை விவரங்களை ஏற்றினார்.
செப் 1
செப்டம்பர் 1 அன்று முழு நிகழ்ச்சி விவரங்கள், பேச்சாளர்கள், வலைத்தளம் வெளியிட முயல்கிறோம்.
- மாநாட்டுக்கென எல்லாச் சமூக வலைத்தளங்களிலும் பக்கங்கள் தொடங்க வேண்டும். இன்னும் சில நாட்களே இருப்பதால், நாளும் மாநாட்டைப் பற்றிய பரப்புரைகளை அங்கே நடத்த வேண்டும்.
- இடம், நாள், நடத்துவோர் (இலயோலா இணைகிறார்கள் எனில், அவர்கள் துறை) முடிவாகி விட்டால், செய்தித்தாள், காட்சி ஊடகங்களுக்குச் செய்தி அனுப்ப வேண்டும்.
- பேச்சாளர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களின் படம், சிறு குறிப்பு வாங்கி அதை ஒரு பதிவாக(poster) சமூக வலைத்தளங்களில் வெளியிடலாம்.
- முடிந்தால் பேச்சாளர்களிடம் ஒரு நிமிடக் காணொலி வாங்கி அதையும் வெளியிடலாம்.
- மாநாட்டின் நேரலை பற்றிப் பேச வேண்டியிருக்கிறது.
- இரண்டாம் நாள் பயிற்சிப்பட்டறையை எப்படி நடத்தப் போகிறோம்? என்ன தலைப்பு? யார் பயிற்சிக்குப் பொறுப்பு? என்பதைப் பற்றியும் பேச வேண்டும். Machine Learning, Artificial Intelligence போன்ற பெரிய தலைப்புகளில் மிக மிகச் சிறிய அறிமுகம் இருப்பது புதியவர்களை வெகுவாக ஈர்க்கும்.
இன்னும் சில கருத்துகளையும் பின்னர் பதிவிடுகிறேன்.
முதலில் நாள் மற்றும் இடத்தை விரைந்து முடிவு செய்யவும். பேச்சாளர்களை உறுதி படுத்தவும். அப்போதுதான் இணையதளம் வெளியிட முடியும்.
மயூரன், எழில் - முத்து அண்ணாமலை போன்ற வெளிநாட்டு அறிஞர்களை அழைத்து இணையவழி அமர்வுகளைத் தனி ஒரு நாளில் நடத்தலாமா? செப். 17 அன்று அவர்கள் பேசுவதாக வைத்தாலும் சிறப்பு, இல்லை மாநாட்டை ஒட்டிய வெள்ளிக்கிழமை என்றாலும் சரி தான்.
கட்டற்ற மென்பொருள் நாள் அன்று இணைய வழி அமர்வாக நடத்துவது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
நாளை, ஞாயிறு மாலை 6 மணிக்கு, மாநாட்டு திட்டமிடல் சந்திப்பு நடைபெறுகிறது.
Jitsi Meet
இந்த இணைப்பில் அனைவரையும் இணைய வேண்டுகிறேன்.
மாநாடு இடம் - இலயோலா . நாள் 24, 25 செப்டம்பர் உறுதி ஆகி விட்டது.
அடுத்த கட்டப் பணிகள், வலைத்தளம், கட்டணம், பேச்சாளர்கள், தலைப்பு, சிற்றரங்குகள் பற்றி உரையாடலாம்.
நான்காம் சந்திப்பு - குறிப்புகள்
கலந்து கொண்டோர்
தனசேகர்
பரமேஸ்வர்
முத்து
மோகன்
சீனிவாசன்
விக்னேஷ் கார்த்திக்
இடம்
இலயோலா உறுதியானது.
நாளை மதியம் 2 மணிக்கு கல்லூரி சென்று, இடம், அரங்கு, உணவு வசதிகளை பார்க்கப் போகிறோம்.
நாள்
24,25 உறுதியானது
பயிற்சிப் பட்டறைகள்
தனசேகர் - devops - அக்டோபர் 1 - இடம் பயிலகம்
தமிழரசன், நித்யா - Machine Learning - செப்டம்பர் 25 - இடம் - இலயோலா
லினக்ஸ் அறிமுகம் - மோகன் - செப் 18 - பயிலகம்
பைத்தான் - முத்து - அக் 2 - பயிலகம்
நிகழ்ச்சிகள்
செப் 17 - இணைய உரை
செப் 18 - லினக்ஸ்/Devops அறிமுகம் பட்டறை -பயிலகம் - மோகன்
செப் 24 - மாநாடு - இலயோலா
செப் 25 - Machine Learning - பட்டறை - இலயோலா
அக்டோபர் 1 - Devops அறிமுகம் பட்டறை - பயிலகம் - தனசேகர்
அக்டோபர் 2 - பைத்தான் பட்டறை - பயிலகம் - முத்து
பட்டறை உதவியாளர்கள் - பரமேஸ்வர், சீனிவாசன்
மோகன் பட்டறைகள் நடத்த பிற இடங்களிலும் கேட்பார்.
வலைத்தளம்
tossconf22.kaniyam.com தயாராகி வருகிறது
http://tossconf-v2.surge.sh/
கட்டணம்
100 ரூ - 200 ரூ வைக்கலாம். நாளை கல்லூரியில் இதை முடிவு செய்வோம்.
RazorPay முயன்று வருகிறோம்.
google form, UPI ஐக்கும் தயாராக உள்ளோம்.
பயிற்சிப் பட்டறைகள் நாட்களில், கலந்து கொள்வோரிடம் நன்கொடை பெற்று, அனைவருக்கும், உணவு வழங்கலாம்.
பேச்சாளர்கள்
கலாராணி
நித்யா
சுகந்தி
விஜயலட்சுமி
அபிராமி
சிற்றரங்குகள்
பரமேஸ்வர், முத்து ஒருங்கிணைக்கின்றனர்.
பேச்சாளர்கள், அரங்காளர்களுக்கான தனி கூட்டங்கள் 2,3 நடத்தி, அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் தர வேண்டும்.
இணைய உரைகள்
செப் 17 ல் 4,5 இணைய வழி உரைகள் நடத்தலாம்.
எழில் முத்து, இலங்கை மயூரன், மலேசியா இளந்தமிழ் போன்ற வெளிநாட்டினரை பேச வைக்கலாம்.
பரமேஷ்வர் இதை ஒருங்கிணைப்பார்.
@gurulenin The above shared Logo designs for the conference are great!
Kindly share the svg document for the logo designs. It is needed for using it in social media posts.
** இலயோலா கல்லூரி - இடம் பார்வையிடல் - குறிப்புகள்
நாள் - 5 செப் 2022
கலந்து கொண்டோர்
அன்வர்
தனசேகர்
சீனிவாசன்
பேரா. டான் ஸ்டோனி
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். சூ. அமல்ராஜ் அவர்களை சந்தித்து நிகழ்வு பற்றி விளக்கினோம்.
பின், நிகழ்வுக்கான அரங்கு, , 280 பேர் அமரக் கூடியது. கணினி அரங்கு 200 பேர் அமரக் கூடியது,
இவைகளைப் பார்த்து, அங்குள்ளோரிடம் பேசி உறுதி பெற்றோம்.
மதிய உணவிற்கு, உணவுக் கூடத்தில் 100 ரூ க்கு, 2 காபி, மதிய உணவு பெற அனுமதி பெற்றோம்.
அரங்குகளில் இணைய வசதி உள்ளது.
நேரலை செய்யலாம்.
நிகழ்விற்கு நாம் கட்டணம் ஏதும் தர வேண்டாம்.
பங்கேற்பாளர்கள் விவரங்கள் தர வேண்டும்.
முழு நிகழ்வு விவரங்கள் வெள்ளிக்குள் தர வேண்டும்.
கண்காட்சிக்கு ஒரு தனி அறை பெற வேண்டும்.
கணினி அரங்கில் மைக், ஒலி பெருக்கி அமைப்பு செய்ய வேண்டும்.
பைத்தான், இயந்திரக் கற்றல் இரு பட்டறைகளையும் ஒரே நாளில் செய்தால், இக்கல்லூரி மாணவர்கள் பலரும் பயன் பெறுவர்.
இன்று முதல் தினமும் மாலை 7.7.30 வரை இணைய வழியில் சந்தித்து, நிகழ்வுகளை திட்டமிடுகிறோம்.
இன்றைய சந்திப்பில் அனைத்து நிகழ்வுகளுக்கான அட்டவணை தயாரித்து இங்கே வெளியிட்டுள்ளோம்.
பயிற்சிப்பட்டறைகளை நடத்த மயிலாப்பூரில் உள்ள Qube Cinemas நிறுவனம் இடம் அளித்துள்ளது.
நாளை அங்கு சென்று, இடம், உணவுக்கான வசதிகளை பார்வையிட்டு, நாளை மாலை இடம் உறுதி செய்து விடுவோம்.
இன்று இலயோலா கல்லூரி, Qube Cinemas இரு இடங்களையும் பார்வையிட்டோம்.
பங்குபெற்றோர்
அருண்
முத்து
தனசேகர்
மோகன்
சீனிவாசன்
Qube Cinemas, மயிலாப்பூரில், பயிற்சிப்பட்டறைக்கான இடம், இருக்கை, மேசை, Projector, Mike, Speaker, டீ, உணவு ஆகியன பற்றி பேசினோம். தேவையான அனைத்தும் கிடைக்கும் என்று உறுதி பெற்றோம்.
இலயோலா கல்லூரியில் உரைகளுக்கான அரங்கு, கண்காட்சிக்கான வகுப்பறை, டீ, மதிய உணவு ஆகியன பற்றி உறுதி பெற்றோம்.
வலைத்தளம் தனசேகர் உருவாக்கி வருகிறார்.
பரப்புரைக்கான படங்கள் விக்னேஷ் உருவாக்குகிறார்.
செப் 17க்கான உரைகளைத் திட்டமிட்டு, நாளை வலைத்தளம் வெளியிடுவோம்.
மாநாடு, பட்டறைகள் இனிதே நடந்தன. பங்களித்த அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.
71 பேர் பதிவு செய்திருந்தனர்.
வரவு -
முன் பதிவு - 71*200 = 14200
இராமன் ILUGC நன்கொடை - 5000
செலவு
உணவு - 18900
தமிழ்க்கணிமை எழுத்து விருது (முனைவர் ச.குப்பன்) - 5000
சான்றிதழ்,நோட்டு,பேனா-
ஸ்டிக்கர்கள்- 3000
துருவங்கள் 100 பிரதிகள் - 10,000