இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு - திட்டமிடல்

2020 ல் முதல் கட்டற்ற தொழில்நுட்ப மாநாட்டை இணைய வழியில் நடத்தினோம்.
காணொளிகள் இங்கே - மாநாடு : [நாள் 1] **தொடக்க விழா** கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு | ஓம்தமிழ் - YouTube

இந்த வருடம் நேரடி நிகழ்வாக நடத்தலாம்.

ஆண்டுதோறும் செப்டம்பர் 17 ‘மென்பொருள் விடுதலை விழா’ https://www.softwarefreedomday.org/ என உலகெங்கும் கொண்டாடப் படுகிறது.
அதே நாளில் இந்த மாநாட்டை நடத்தலாம்.

மாநாட்டை ஒருங்கிணைக்க ஆர்வமுள்ளோர், இங்கு பதில் தருக.

மாநாட்டின் நிகழ்வுகள், உரைகள், பயிற்சிப் பட்டறைகள் நடத்த ஆர்வமுள்ளோரும் உங்கள் ஆர்வங்களை எழுதுக.

இணைந்து நடத்த விரும்பும் அமைப்புகள் சார்ந்தோரும் எழுதுக.

3 Likes

நடத்தக் கூடிய இடங்கள் - சென்னையில் ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது அண்ணா நூலக அரங்கு

உங்களுக்கு கல்லூரிகளில் தொடர்பு உள்ளது எனில் இடம் வாங்கித் தர இயலுமா?

நிகழ்வுகள் - 1 நாள் அல்லது 2 நாட்கள்
6-8 உரைகள்
2 பயிற்சிப் பட்டறைகள்
20-30 மென்பொருள் அறிமுக சிற்றுரைகள்

செலவுகள் -
உணவு
தேநீர்
மேடை
நினைவுப் பரிசுகள்

இணைந்து நடத்துவோர் (செலவுகளைப் பகிர்ந்து கொள்வோர்)
சென்னை லினக்சு பயனர் குழு
விழுப்புரம் லினக்சு பயனர் குழு
காஞ்சிபுரம் லினக்சு பயனர் குழு
தமிழ் இணையக் கழகம்
மோசில்லா தமிழ்
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இலங்கை
பயிலகம்
கணியம் அறக்கட்டளை
Open Space Foundation

1 Like

கணியம் அறக்கட்டளை இதை இணைந்து நடத்துகின்றதா?

ஆம். பெயர் சேர்த்து விட்டேன்

செப்டம்பர் 17, பெரியார் பிறந்த நாளும் கூட. பொருத்தமாக இருக்கும். துருவங்கள் வெளியீட்டையும் அதில் சேர்க்கலாம். ஆனால் மிகக் குறைவான நாட்களே உள்ளன. தீவிர திட்டமிடல் தேவை என உணர்கிறேன்.

1 Like

ஏதேனும் ஒரு கல்லூரியில் இடம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

Open Space Foundation ம் இணைந்துகொள்ள விரும்புகிறது.

மிக்க நன்றி @openspacefoundation சேர்த்து விட்டேன்.
மாநாட்டில் நீங்கள் ஏதேனும் நிகழ்வு அல்லது உரை அல்லது பயிற்சி நடத்த இயலுமா?

இம்மாநாட்டில் உரை அல்லது பயிற்சிப் பட்டறை நடத்த விருப்பம். எந்தெந்த தலைப்புகளில் நடத்தினால் பயன்தரும் என்று பரிந்துரைக்கவும்.

மிக்க நன்றி @Kalarani_Lakshmanan உங்கள் விருப்பமான தலைப்பை நீங்களே இங்கு எழுதுங்கள்.

நாளை (15-08-2022) மாலை 5 மணிக்கு இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு பற்றிய கூட்டம் நடைபெர உள்ளது.

இந்த இணைப்பை பயன்படுத்தி அனைவரும் இணையவும்.

நன்றி. இணைகிறேன்.

இன்றைய இணையவழிச் சந்திப்பில் தமிழ் இணையக் கழகம் சார்பாக கலந்துகொள்கிறேன்

அவசியம் கலந்துகொள்கிறேன்

இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு - திட்டமிடல்

திட்டமிடல் - முதல் சந்திப்பு - நிகழ்வுக் குறிப்புகள்
15-8-2022 மாலை 5-7 மணி

பங்கு பெற்றோர்

தனசேகர்
துரை மணிகண்டன்
அசோக்
சிசரவணபவானந்தன்,தமிழறிதம்
சீனிவாசன்
தமிழரசன்
அபிராமி
பரமேஸ்வர்
முத்து ராமலிங்கம்

நிகழ்வுகள்

அறிமுக உரை
நிகழ்ச்சி நிரல்
உரைகள்
பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய சிறு அரங்குகள்
கேள்விபதில்
உரையாடல்
துருவங்கள் நூல் வெளியீடு
தமிழில் கட்டற்ற வளங்களுக்கு பங்களிக்கும் சிலருக்கு பரிசு அளித்தல்

ஆகிய நிகழ்வுகளை மாநாடு நாளில் நிகழ்த்தலாம்.

கால அட்டவணை

10-1 - உரைகள்

10-11.30 2-3 உரைகள்
11.30 - 11.45 - இடைவேளை
11.45-1.00 2-3 உரைகள்

1-3 - மதிய உணவு, சிற்றரங்குகள், தேனீர்

3-5 - 3-4 உரைகள்
பங்கு பெற்றோர் கருத்துகள் - 20 minutes
முடிவுரை - 6 pm

எல்லா உரைகளும் 20-30 நிமிடங்கள், 10 நிமிடங்கள் கேள்வி பதில்கள்

பயிற்சிப் பட்டறைகள்
மாநாட்டுக்கு மறுநாள், முந்தைய சனி ஞாயிறுகளில் இடம் கிடைக்கும் வாய்ப்பைப் பொறுத்து, பின்வரும் பயிற்சிப் பட்டறைகளை நடத்தலாம்

  1. Python - முத்து
  2. Linux intro - பரமேஸ்வர்
  3. Datascience - நித்யா
  4. Machine Learning - தமிழரசன்
  5. Devops - தனசேகர்

இடம் - ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது பயிலகம்

இடம்

பின்வரும் இடங்களில் ஒன்றில் நிகழ்வை நடத்த முயன்று வருகிறோம்.

எஸ். ஆர். எம் பல்கலை
அண்ணா நூலகம்
மாநிலக் கல்லூரி

செலவுகள்

100 பேர் நிகழ்வில் பங்கு பெறுவர் என்று எண்ணி, பின்வரும் செலவுகளை எதிர் பார்க்கிறோம்.

இட வாடகை - 3000 (அண்ணா நூலகம்) முன் வைப்புத் தொகை 10,000
புகைப்படம், வீடியோ - 10,000

டீ பிஸ்கட் , மதிய உணவு ,டீ பிஸ்கட் - 300 ரூ
30,000 ரூ

சான்றிதழ் - 3000 ரூ
ஸ்டிக்கர் - 2000 ரூ

டீசட்டை - வேண்டாம். அதிக செலவு ஆகும்.

எழுது பொருட்கள் - கோப்புறை, நோட்டு, பேனா, நிகழ்வுக் குறிப்புகள், விளம்பரங்கள் - 100 ரூ
10,000 ரூ

நினைவுப் பரிசு ( புத்தகங்கள், சால்வை, ஷீல்டு ) - பேச்சாளர்களுக்கு
200 ரூ ஒருவருக்கு
40 x 200 = 8000 ரூ

மொத்த செலவுகள் - 66,000 ரூ
இதர செலவுகள் சேர்த்து 80,000 ரூ வரை ஆகலாம்.

பதிவு
இலவசமா? கட்டணமா? என்று விவாதித்தோம். இலவசமாக இருந்தால் மிக நன்று. ஆனால், உணவு, தேனீர் ஏற்பாடு செய்ய, துல்லியமான எண்ணிக்கை வேண்டும். எனவே குறைந்த பட்ச நன்கொடையாக ரூ. 250 ஐ பதிவு செய்யக் கோரலாம்.

பதிவு படிவம் உருவாக்க வேண்டும். அதில் நன்கொடை அனுப்பிய சான்று இணைக்க வேண்டும்.

பதிவு செய்ய இறுதி நாள் - செப்டம்பர் 10 2022

நேரலை ஒலி பரப்பு

இதற்கான வாய்ப்புகள், கருவிகள் பற்றி துரை. மணிகண்டன் அவர்கள் விரைவில் ஆய்ந்து பதில் தருவார்.

சான்றிதழ்கள்

கலந்து கொள்வோருக்கு, தேவையானோருக்கு, சான்றிதழ் வேண்டும். இவை கல்வித் துறையில் உள்ளோருக்கு பயன் தரும்.

துருவங்கள் - வெளியீடு
நிகழ்வில் துருவங்கள் நாவலை, அச்சு நூலாக வெளியிடலாம்.
அங்கே விற்பனை செய்யலாம். அதற்கான வாய்ப்புகளை ஆராய வேண்டும்.

பணிகள்

*** TODO முதல் செயல் - இடம், பேச்சாளர்களை முடிவு செய்தல் - சீனி
*** TODO அழைப்பிதழ், சான்றிதழ்- அசோக், முத்து, லெனின்
*** TODO உணவு, தேநீர் - துரை மணிகண்டன்
*** TODO ஸ்டிக்கர் அச்சிடல் - தமிழரசன்
*** TODO பேச்சாளர்கள் அழைப்பு - சீனிவாசன்
*** TODO சிற்றரங்குகள் அழைப்பு - முத்து
*** TODO துருவங்கள் வெளியீடு - தனசேகர்
*** TODO முன்பதிவு படிவம் வடிவமைப்பு - அபிராமி
பெயர், மின்னஞ்சல், தொடர்பு எண், பணி அல்லது படிப்பு, நன்கொடை சான்று ஆகிய விவரங்களை முன்பதிவு படிவத்தில் பெற வேண்டும்.

நன்கொடை செய்யும் வழிகள்

  1. கணியம் அறக்கட்டளை கணக்கிற்கு ரூ 250 UPI அல்லது bank transfer அனுப்ப வேண்டும்.

  2. அதன் திரைப்பிடிப்பை முன்படிவுப் படிவத்தில் சேர்க்க வேண்டும்.

  3. அதை சரிபார்த்து, வரவேற்பு மடல் அனுப்ப வேண்டும்.

வரவேற்பு மடலில், நிகழ்வு பற்றியும், சார்ந்த அமைப்புகள் பற்றியும் எழுத வேண்டும்.

*** TODO கல்லூரிகளுக்கு அழைப்பிதழ் அனுப்புதல் - தமிழரசன்
*** TODO முன்பதிவு, நன்கொடைகள் சரிபார்த்தல், பதிவு தொடர்பான கேள்விகளுக்கு பதில் தருதல், நிகழ்வில் அனுமதித்தல் - அபிராமி
*** TODO சமூக ஊடகங்களில் பரப்புரை செய்தல்
*** TODO பயிற்சிப் பட்டறைகளை ஒருங்கிணைத்தல் - தனசேகர்
*** TODO சான்றிதழ்கள் அச்சிடுதல் - பரமேஸ்வர், தமிழரசன்
*** TODO வரவு - செலவு பொறுப்பு -அபிராமி
*** TODO நிகழ்ச்சி தொகுத்து வழங்குதல் - கார்க்கி, கலீல்
*** TODO கலை நிகழ்ச்சிகள் - இடம் அனுமதித்தால்.
*** DONE டெலிகிராம் குழு - உருவாக்கம் - சீனி
*** TODO பேச்சாளர்கள்
முற்றிலும் பெண்களே பேச்சாளர்களாக இருப்பது, புதிய பேச்சாளர்களாக இருப்பது நன்று.

கலாராணி, அபிராமி, நித்யா, விஜயலட்சுமி, கௌசல்யா ஆகியோரைக் கேட்கலாம். இன்னும் பலரையும் கேட்க வேண்டும்.

இப்பணிகளில் இணைந்து பணியாற்ற விரும்புவோர் இங்கு பதில் தருக. அல்லது எழுதுக - KaniyamFoundation@gmail.com

இந்த மாநாடு மெய்நிகராகவும் நடைபெறுமா?

நேரடி நிகழ்வு தான்.

இணைய நேரலை இருக்கும்.

  1. மாநாட்டுக்குத் தேவையான வரைகலைப் பணிகளை (invitation, poster etc) நான் மேற்கொள்கிறேன்.

  2. பேச்சாளர்களுக்கு வழங்கப்படும் சீல்டுகளை - fully customized acrylic laser cutting மூலம் செய்து கொள்ளலாம். (இணைப்பை பார்க்க)

  1. துருவங்கள் மட்டுமல்லாமல் கணியம் வெளியிட்ட மின்னூல்களையும் அச்சுப் பதிப்பாக விற்கலாம் (மின் புத்தகங்கள் – கணியம்)

  2. கட்டற்ற மென்பொருட்கள் தொடர்பான laptop stickers, stickers, badges களையும் விற்பனை செய்யலாம்.

மாநாட்டுக்கென ஒரு இலச்சினை உருவாக்குக

வணக்கம்-
செயலாளர் தமிழறிதம்