செப்டம்பர் 17 ஆம் நாள் சென்னையில் *விக்கி மாரத்தான் பயிலரங்கு*

செப்டம்பர் 17 ஆம் நாள் சென்னையில் விக்கி மாரத்தான் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் அடிப்படையான விக்கிப்பீடியப் பங்களிப்பினைப் பற்றியும் விக்கி மாரத்தான் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்; இணையத்தில் தமிழ் வளர்க்கலாம். நுழைவுக் கட்டணமில்லை.

குரோம்பேட்டை MIT ஏயு-கேபிசி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து நடக்கும் இந்தப் பயிலரங்கில் கலந்து கொள்ள கீழ்க்கண்ட படிவத்தில் முன்பதிவு செய்து கொண்டு பங்கெடுக்க அழைக்கிறோம்.