லினக்சு மிண்டு 21 - சினாமன் அண்மையில் நிறுவிப் பயன்படுத்தி வருகின்றேன். ஒரு சிக்கல். முயல்கிறேன். இருப்பினும் சரியான வழிகாட்டல் தேவை?

வணக்கம். என் லினக்சு மிண்டுக் கணினியையும் புரசக்டரையும் (திறன் பலகையையும்) இணைக்க முயற்சித்தும் முடியவில்லை. நான் மாணவர்களுக்குக் கற்பிக்க இது அடிப்படை என்பதால் இந்த உதவியை நாடுகின்றேன். இதற்கு மென்பொருள் நிறுவ வேண்டுமா? மடிக்கணினியையும் திறன்பலகையையும் இணைக்க முடிகின்றது. ஆனால் கணினியில் உள்ளவற்றைத் திறன் திரையில் காண்பிக்க இயலவில்லை. இதனால் இரண்டு நாள் பாடம் வெறும் வாய்மொழியாக மட்டுமே சென்றது. சிலநேரங்களில் இரவல்.

  1. தொடக்கப் பொத்தானை(Start Button)ஐ அழுத்துங்கள்.
  2. Display எனத் தட்டச்சிடுங்கள்.
  3. அப்போது வரும் திரையில் திறன் பலகை(projector)யை இணைப்பதற்கான வழிகள் இருக்கும்.
    ஒருவேளை அதைக் கண்டறிவதில் சிக்கல் இருந்தால், அந்தத் திரையைப் பகிருங்கள்.


நன்றி! ஆனால் கண்டறிவதில் சிக்கல். நான் வேறு என்ன செய்ய வேண்டும்?

உங்கள் திறன்பலகையை[Projector]யை இணைத்திருக்கும் போது
கணினியில்

  1. தொடக்கப் பொத்தானை அழுத்துங்கள்.
  2. Terminal எனத் தட்டச்சிடுங்கள்.
  3. வரும் கருப்புத் திரையில் xrandr எனக் கொடுத்து வரும் வெளியீட்டைப் பகிருங்கள்.

நான் இப்பொழுது இல்லத்தில் உள்ளேன். கல்லூரிக்குச் சென்று தாங்கள் கூறியதுபோல் செய்து பார்த்த பின்பு அத்திரையைப் பகிருகின்றேன். @muthu நன்றி!

இணைக்காத பொழுது முனையத்தில் தாங்கள் கொடுத்த குறிப்பைத் தந்தபொழுது வரும் திரை.

தாங்கள் கூறியதுபோல் இன்று கல்லூரியில் திறன் பலகையின் இணைப்புடன் இணைத பின்பு அக்குறிப்பை முனையத்திற்குத் தந்தேன். அது பின்வரும் தகவலைத் தந்தது.


பின்பு என் கல்லூரி கணினி நுட்ப அணுக்கர் உதவியை நாடினேன். அவர் விண்டோசு பொத்தானையும் பி பொத்தானையும் அழுத்தித் திறன்பலகையில் தெரியும்படி செய்து தந்தார். அவர்கள் விண்டோசிற்குப் பழக்கப்பட்டவர்கள் ஆதலால் கொஞ்சம் பொறுமையாகவே கண்டறிந்தனர். இருப்பினும் அது எக்சடண்டு திரையாகவே இயல்பிருப்பியாக உள்ளது. மடிக்கணினியிலும் திரையிலும் தெரியும் வண்ணம் அமைப்பதற்கு மீண்டும் மீண்டும் அவ்விரு பொத்தான்களையும் அழுத்தும் சூழல் உருவாகின்றது. அவ்வாறு செய்யும் பொழுது சில நேரங்களில் பிளர் ஆகின்றது. இதனைத் தவிர்க்க வழிகள் உண்டா?

டிஸ்ப்ளே செட்டிங்கிலேயே Mirror என்று ஒரு தேர்வு இருக்கும். அதில் எந்த மானிட்டரில் மிரரிங் செய்ய வேண்டுமோ அதை தேர்வு செய்தாலே போதும், தங்கள் லேப்டாப்பில் இருக்கும் திரை புரோஜக்டரில் தெரியும்.

தங்கள் சிக்கல் தீர்ந்துவிட்டதா என்று பகிரவும்.

தற்பொழுது கல்லூரி விடுமுறை. கல்லூரி திறந்த பின்பு திரையுடன் இணைத்துப் பார்த்துவிட்டுக் கூறுகின்றேன். பொறுத்தருள்க.

தோழர். இந்த சிக்கல் தீர்ந்துவிட்டதா என்று கூறவும்.

@mohan43u அதைச் சரிபார்ப்பதற்கான சூழல் அமையவில்லை தோழர். வரும் திங்களன்று அமையும் என்று எதிர்பார்க்கின்றேன்.

இரண்டு முறை மிர்ரர் செய்து பார்த்தேன். பலன் இல்லை. அப்பொழுது கணினியின் வேகம் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இன்று முயற்சித்தேன் பலன் தந்தது. இருப்பினும் அடுத்த முறை மீண்டும் இணைக்கும்பொழுது இச்சிக்கல் வருகின்றதா என உறுதிப்படுத்திக் கொள்கின்றேன். தற்பொழுது இயக்கிப் பார்த்த படிமங்களை இங்குப் பதிவிடுகின்றேன்.

இது முடிந்தது என்று நினைக்கும்பொழுது பின்வரும் படிமத்தில் உள்ளமை போன்று எழுத்துக்கள் உடைந்து (பிளர்ரராகத்) தெரிகின்றது. இது எதனால் வந்த சிக்கல்.
(upload://a3zluCwdC1MFNG3PHhRsdVzvlWO.png)

மீண்டும் இணைத்துப் பார்த்தபொழுது இரண்டு புரிதல் ஏற்பட்டது. ஒன்று - ஒவ்வொரு முறையும் இணைக்கும் பொழுது மிர்ரர் செய்யவேண்டும் என்பது,இரண்டு - மிர்ரர் செய்யம்பொழுது திரை பிளர்ரர் ஆகும் என்பது,
[image was deleted]
கணினியை அணைத்து மீண்டும் இயக்கும்பொழுது அந்த பிளர்ரர் வராது என்பது கூடுதல் புரிதல். இருப்பினும் அச்சிக்கலைத் தீர்க்க வழி ஏதேனும் உண்டா?

எங்கே பிளர் ஆகின்றது? லேப்டாப்பிலா? அல்லது புரொஜக்டரிலா? புரொஜக்டரில் என்றால் இணைப்பு சரியாக பொருந்தாமல் இருந்திருக்கும்.

மடிக்கணினியில் ஆகின்றது

முடிந்தால், மேல் உள்ள படத்தை நீக்கி விடுங்கள். பலரது தனிப்பட்ட தரவுகள் இருப்பதாகத் தெரிகிறது.