லினக்ஸில் எந்த மென்பொருளின் உதவி இல்லாமலும் ஆடியோ இல்லாமல் வீடியோ பதிவு செய்வது எப்படி?

.
ctr+alt+shift+R இந்த Sortcut keyயை உபயோகிப்பதன் மூலம் திரையை வீடியோ பதிவு செய்யலாம்

மீண்டும் அதே keyயை பயன்படுத்துவதால் வீடியோ பதிவை நிறுத்த முடியும்.

இந்த பதிவு வீடியோ கோப்புகளில் பதிவு ஆகி இருக்கும்…

நன்றி

8 Likes

அருமை.

இது போன்ற தகவல்களுடன் அவை எந்த Desktop Environment க்கு ஏற்றவை என்றும் பகிர்க.

தொடர்ந்து பயனுள்ள தகவல்களைப் பகிர வேண்டுகிறேன். மிக்க நன்றி

3 Likes

@tshrinivasan கண்டிப்பாக சார்

திரையில் Video recording செய்யும் போது sound கேட்கவில்லை.இந்த சிக்கலை எவ்வாறு தீர்ப்பது

ஆடியோ இல்லாமல் மட்டுமே பதிவு செய்ய முடியும்

நன்றி நன்றி

ffmpeg -loglevel +verbose -f x11grab -i :0.0 -f pulse -i default -c:a aac -c:v libx264 -f mp4 screencast.mp4

லினக்ஸ் கமாண்டுகளால் செய்ய முடியாதது என்று சொல்வதற்கு வெகு சில விஷயங்களே உள்ளன.

@mohan43u இந்த comment எதற்கு பயன்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாமா

அந்த கட்டளை திரைப்பதிவு செய்ய உதவும். செய்து பாருங்கள்.

நான் அதை அன்றே முயற்சி செய்தேன்…டெர்மினல் இயங்க ஆரம்பித்தது 3 நிமிடங்களில் லேப்டாப் ப்ராசசசர் மிகவும் வேகமாக இயங்க ஆரம்பித்தது…‌‌‌

கூலிங் பேன் மிக வேகம்…எனக்கோ ஒருவித பயம் உடனே டெர்மினல் இயக்கத்தை ரத்து செய்தேன்…

அதான் கேட்டேன் இந்த கட்டளை எதற்கு உதவும் என்று…

நன்றி…

அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்…