கணினித் தமிழ் நூல்கள்

வணக்கம்,

கணினித் தமிழ் சார்ந்த அச்சு நூல்கள் வெளியிட்டவர்களுக்கு ஒரு நினைவூட்டல்.

மதுரையில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கான நூல்கள் மற்றும் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அச்சு நூல்கள் கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அறிந்திருப்பீர்கள். கணினித் தமிழ் சார்ந்த நூல்கள் குறைவாகப் பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக அறிகிறேன்.

உங்கள் நூல்களின் பட்டியலை இம்மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து Microsoft Excel வடிவில் kclbookselection@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். (உடன் இதர துறை நூல்களையும் அனுப்பலாம்)

குறிப்பு:

கணினித் தமிழ் நூல்களின் தொகுப்பு இதில் விடுபட்டுள்ள கணினித் தமிழ் அச்சு நூல்கள் இருந்தால் எனக்கும் அனுப்பலாம், இற்றை செய்கிறேன்.


நீச்சல் காரன் neechalkaran@gmail.com

1 Like