கேகிள் தமிழ் சவால்

வணக்கம்,

மொழியியல்/இயந்திரவழிக் கற்றல் தொடர்பான ஒரு சவால் போட்டியினைச் சென்னை டென்சர்ஃப்ளோ பயனர் குழு சார்பாக அறிவிக்கப்பட்டது.

கொடுக்கப்பட்டுள்ள மாதிரிகளைக் கொண்டு பயிற்றுவித்து, எந்தப் பாடல் வரி எந்தப் பாடலாசிரியர் சாயலில் உள்ளதெனக் கணிக்க வேண்டும்.
எந்த ஒரு NLP பொதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். நிறைவடைந்த உங்கள் நிரலை அங்கே கொடுக்கவேண்டும். யாருடைய தீர்வு ஏறக்குறைய சரியாகக் கணிகிறதோ அவர்களுக்குப் பரிசுகளும் உண்டு.

தொடர்ந்து தமிழ் சார்ந்த நுட்பப் போட்டிகளை நடத்த அதற்கான பங்கேற்பாளர்கள் அதிகம் வேண்டும். ஆர்வமுள்ளவர்களிடம் பகிரலாம், பங்கேற்கலாம்.

செய்திக்கு நன்றி நீச்சல்காரன்.