லினக்ஸ் மின்ட் - வெப் ஓஎஸ் திரைப் பகிர்வு - வேலை செய்யவில்லை

நான் லினக்ஸ் மின்ட் பயன்படுத்தி வருகிறேன். வெப் ஓஎஸ் கொண்ட தொலைக்காட்சியில் என்னுடைய லினக்ஸ் திரையைப் பகிர முயன்றேன். குரோம் காஸ்ட் வெப் ஓஎஸ் தொ.காட்சியைக் காட்டவேயில்லை. பிறகு, gnome network displayஐ Software Managerஇல் இருந்து நிறுவினேன். ஒவ்வொரு முறை திரையைப் பகிரும் போதும் ஒரு சில நிமிடங்கள் திரை பகிரப்படுகிறது. பிறகு சில நிமிடங்களிலேயே, ‘Disconnected Network’ என்று பெட்டி வலது மேல் மூலையில் தோன்றி திரைப் பகிர்வு நின்று விடுகிறது.

சிக்கல் தீர வழி சொல்லுங்களேன்.

gnome-network-display எல்லா இடத்திலும் வேலை செய்யும் என்று உறுதி இல்லை. GNOME / gnome-network-displays · GitLab இங்கே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை முயற்சித்து பார்க்கவும்.

1 Like

திரைப் பகிர்வுக்கு வேறு வழி எதுவும் இருந்தாலும் சொல்லுங்களேன்.

Google Chromecast கருவி வாங்கி இணைக்கவும்.

அல்லது ஒரு நீண்ட HDMI cable வாங்கி இணைக்கவும். இதுவே விலை, வேலை குறைந்த வழி.

1 Like

webos ல் இணைய உலாவி இருந்தால் அதில் ஒரு jitsi லிங்கை உருவாக்கி விட்டு அந்த லிக்கில் தங்கள் மொபைலில் jitsi - fdroid செயலி மூலம் இணைந்து மொபைலின் திரையை பகிரலாம். ஆனால் நிகழ்படங்களை பகிர்வது சரியாக இருக்காது. நிகழ்படங்களை பகிர chromecast டிவைஸ் வாங்கி அதை தங்கள் தொலைக்காட்சியில் இணைத்து பயன்படுத்துவதே தற்போதைக்கு உள்ள மாற்று வழி.

1 Like